Home
Mobile

ஏற்கனவே பட்ஜெட் விலை, இதுல விலைக்குறைப்பு வேற.? அடித்தது அதிஷ்டம்.!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானர், பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியா உடன் கூட்டணி கொண்டு அதன் - ஹானர் பிளாக்பஸ்டர் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது.

By Muthuraj

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானர், பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியா உடன் கூட்டணி கொண்டு அதன் - ஹானர் பிளாக்பஸ்டர் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது. நேற்று (ஏப்ரல் 12) முதல் தொடங்கி ஏப்ரல் 16 வரை நீடிக்கும் இந்த விற்பனையில் ஹானர் ஸ்மார்ட்போன்களின் மீது நம்பமுடியாத விலைகுறைப்பு மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பட்ஜெட் விலை, இதுல விலைக்குறைப்பு வேற.? அடித்தது அதிஷ்டம்.!

இந்த விற்பனையில் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ஹானர் 7எக்ஸ், ஹானர் வியூ 10, ஹானர் 8 ப்ரோ போன்ற பல ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு திறந்து விடப்பட்டுள்ளன. குறிப்பாக ஹானர் 7எக்ஸ் மீது ஒரு மிகப்பெரிய எக்ஸ்சேன்ஜ் ஆபர் மற்றும் ஹானர் 8 ப்ரோ மீது ஒரு நம்பமுடியாத விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விறபனையில் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனும் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 6எக்ஸ் :

ஹானர் 6எக்ஸ் :

மொத்தம் இரண்டு மாடல்களில் வெளியாகும் ஹானர் 6எக்ஸ்- ஸ்மார்ட்போனின் இரண்டு வகைகளின் மீதுமே விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரேம் ஆனது ரூ.9,999/-க்கு வாங்க கிடைக்கும் (அசல் விலை ரூ.13,999/ ஆகும்). மறுகையில் உள்ள 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு மாடல் அவுட் ஆப் ஸ்ட்டாக் ஆக உள்ளது.

ஹானர் 6எக்ஸ் அம்சங்கள் :

ஹானர் 6எக்ஸ் அம்சங்கள் :

பிரதான அம்சங்களை பொறுத்தவரை ஹானர் 6எக்ஸ் ஆனது ஒரு 5.5 இன்ச் முழு எச்டி டிஸ்பிளே, கிரீன் 655 செயலி, ஒரு 3340 mAh பேட்டரி, 8எம்பி செல்பீ கேமரா, 12எஎம்பி மற்றும் 2எம்பி சென்சார் கொண்ட ஒரு டூயல் பின்புற கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஹானர் 8 ப்ரோ:

ஹானர் 8 ப்ரோ:

இந்த 'ஹானர் பிளாக்பஸ்டர் டெய்ஸ்' விற்பனையின் கீழ், இந்த ஹானர் ஸ்மார்ட்போன் மீது ரூ.7,000/- தள்ளுப்படி கிடைக்கிறது. அதாவது ரூ.29,999/-க்கு பதிலாக ரூ.22,999/-க்கு வாங்கலாம். ஹானர் 8 ப்ரோ ஆனது மொத்தம் இரண்டு வண்ண விருப்பங்களில் - மிட்நைட் பிளாக், நேவி ப்ளூ - வாங்க கிடைக்கும்.

ஹானர் 8 ப்ரோ அம்சங்கள் :

ஹானர் 8 ப்ரோ அம்சங்கள் :

பிரதான அம்சங்களை பொறுத்தவரை, 5.7 இன்ச் குவாட் எச்டி 2கே டிஸ்ப்ளே, கிரீன் 960 ப்ராஸசர், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு, 4000mAh பேட்டரி,டூயல் 12எம்பி ரியர், 8 எம்பி செல்பீ ஆகியவைகள் ஆகும். அமேசான் தலத்தில் இந்த ஸ்மார்ட்போஜ் மீது ரூ.12,389/- என்கிற அதிகபட்ச எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும் கிடைக்கிறது.

ஹானர் 7 எக்ஸ் :

ஹானர் 7 எக்ஸ் :

நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மற்றும் சியோமி நிறுவனத்தின் மிகப்பெரிய போட்டியான ஹானர் 7 எக்ஸ் மீது எந்த விலைகுறைப்பும் இல்லை என்றாலும் கூட எக்ஸ்சேன்ஜ் ஆபர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்கீழ் 4 ஜிபி ரேம் + 32 ஜிபி மாடல் மீது ரூ.11,125/- என்கிற அளவிலான எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும் (அசல் விலை ரூ. 12,999), மறுகையில் உள்ள 4ஜிபி ரேம் + 64 ஜிபி மாடல் மீது ரூ.14,389/- என்கிற அளவிலான எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது (அசல் விலை ரூ.15,999).

ஹானர் 7 எக்ஸ் அம்சங்கள் :

ஹானர் 7 எக்ஸ் அம்சங்கள் :

இந்த ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களை பொறுத்தவரை, 5.93 இன்ச் முழு எச்டி + மற்றும் 18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்ப்ளே, கிரீன் 659 செயலி, 16எம்பி மற்றும் 2எம்பி சென்சார்கள் என்ற டூயல் பின்புற கேமரா அமைப்பு, 8எம்பி செல்பீ, ஒரு 3340 mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

 ஹானர் வியூ 10 :

ஹானர் வியூ 10 :

ஹானர் மற்றும் அமேசான் நிறுவனத்தின் 'ஹானர் பிளாக்பஸ்டர் டேஸ்' விற்பனையின் கீழ், ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் தொகுக்கப்பட்டு இருந்தாலும் கூட, எந்த விதமான தள்ளுபடி அல்லது எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும் இதறகு வழங்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Honor Blockbuster Days Sale is here! Huge discount – Honor 8 Pro gets Rs 7,000 off – How to avail. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X