48எம்பி கேமராவுடன் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 19-ம் தேதி அன்று விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த
சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

48எம்பி கேமராவுடன் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளன, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் வெளிவந்துள்ளது.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி6 ஜிபியு வசதியும் வழங்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது என்பதுது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

48எம்பி கேமராவுடன் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் ஆதரவுடன் ஹானர் 9எக்ஸ் போன் வெளிவந்துள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.13,999-விலையில்
விற்பனைக்கு வரும். பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹானர் 9எக்ஸ் மாடல்
ரூ.16,999-விலையில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Honor 9X with 6.59-inch FHD+ display, 48MP rear camera launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X