Honor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹானர் நிறுவனம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி தனது புதிய ஹானர் 9எக்ஸ் ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த சாதனத்துடன் MagicBook லேப்டாப் மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.மேலும் ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் வெளிவந்துள்ளது, அதைப்பற்றி பார்ப்போம்.

ஹானர் 9எக்ஸ் ப்ரோ
ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம்,பசுமை, வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளன, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு 9.0 பை
ஹானர் 9எக்ஸ் ப்ரோ சாதனத்தில் ஆக்டோ-கோர் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி6 ஜிபியு வசதியும் வழங்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்என்பது குறிப்பிடத்தக்கது.

128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி
ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 9எக்ஸ் ப்ரோ கேமரா
ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என மூன்று கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி
ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதுஇ பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ்இ யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக பாஸ்ட் சார்ஜ் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவரும்.


Click it and Unblock the Notifications