Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்.!

சீனாவில் ஹானர் 9எக்ஸ், ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெற்றன. இந்நிலையில் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தலான டிஸ்பிளே

அசத்தலான டிஸ்பிளே

ஹானர் 9எக்ஸ், ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளன, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் வெளிவந்துள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள்.

அருமையான சிப்செட் வசதி

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆக்டோ-கோர் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி6 ஜிபியு வசதியும் வழங்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு திறன்

சேமிப்பு திறன்

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என மூன்று கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி, பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

இரண்டு ஹானர் ஸ்மார்ட்போன்களிலும் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் ஆதரவுடன் இரண்டு போன்களும் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 9X launch teased in India, expected to launch soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X