Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் Honor 9X ஸ்மார்ட்போன்.!

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் இன்று இரவு விற்பனைக்கு வருகிறது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது.

இன்று விற்பனைக்கு வரும்Honor 9X ஸ்மார்ட்போன்.!

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும். பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹானர் 9எக்ஸ் மாடல் ரூ.16,999-விலையில் விற்பனைக்கு வரும். ஆனால் இன்று முதல் விற்பனை என்பதால் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளன, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் வெளிவந்துள்ளது.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி6 ஜிபியு வசதியும் வழங்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது என்பதுது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இன்று விற்பனைக்கு வரும்Honor 9X ஸ்மார்ட்போன்.!

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் ஆதரவுடன் ஹானர் 9எக்ஸ் போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 9X First Sale in India Today via Flipkart : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X