ஜனவரி 14: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

|

சீனாவில் ஹானர் 9எக்ஸ், ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெற்றன. இந்நிலையில் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜனவரி 14-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 14: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

ஹானர் 9எக்ஸ், ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளன, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் வெளிவந்துள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள்.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆக்டோ-கோர் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி6 ஜிபியு வசதியும் வழங்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஜனவரி 14: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என மூன்று கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

ஜனவரி 14: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி, பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இரண்டு ஹானர் ஸ்மார்ட்போன்களிலும் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் ஆதரவுடன் இரண்டு போன்களும் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 9X confirmed to launch on January 14 in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X