ஹானர் 9எக்ஸ், ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை & அம்சங்கள்)
ஹானர் நிறுவனம் தற்சமயம் சீனாவில் ஹானர் 9எக்ஸ், ஹானர் 9எக்ஸ் ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக பாப்-அப் செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற அம்சங்களுடன் பட்ஜெட் விலையில்
அறிமுகம் செய்யப்பட்டள்ளது.

விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அசத்தலான டிஸ்பிளே:
ஹானர் 9எக்ஸ், ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளன, பின்பு
2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் வெளிவந்துள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள்.

அருமையான சிப்செட் வசதி
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆக்டோ-கோர் கிரிண் 810சிப்செட் வசதி உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்பி6 ஜிபியு வசதியும் வழங்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு திறன்:
ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா அம்சங்கள:
ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என மூன்று கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.
ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி, பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
இரண்டு ஹானர் ஸ்மார்ட்போன்களிலும் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் ஆதரவுடன் இரண்டு போன்களும் வெளிவந்துள்ளது.

அட்டகாசமான விலை
இந்திய மதிப்பில்...
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்;ட ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,000.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்;ட ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,000.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,000.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்;ட ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,000.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,000.


Click it and Unblock the Notifications