மலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.!
ஹானர் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஹானர் 9என் இன் விற்பனையை இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் இல் துவங்குகிறது.
ஹானர் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஹானர் 9என் இன் விற்பனையை இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் இல் துவங்குகிறது. பிரத்தியேக துவக்க விற்பனையாகப் பல சலுகைகளுடன் இந்திய சந்தையில் களமிறங்குகிறது.
அழகின் புது வடிவமாகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுப் பல சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அழகான நோட்ச் டிஸ்பிலேயுடன் 12 அடுக்கு கண்ணடி போன்ற ரியர் டிசைனுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது ஹானர் 9என் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.

ஹானர் 9என் பட்ஜெட் ஸ்மார்ட்போன்
ஹானர் 9என் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இரண்டு ரேம் வேரியண்ட் மற்றும் மூன்று உள் சேமிப்பு வேரியண்ட் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இன் அசல் விற்பனை விலை பட்டியல்.
- 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்புடைய மாடல் இன் விலை ரூ.19,999.
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்புடைய மாடல் இன் விலை ரூ.15,999.
- 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்புடைய மாடல் இன் விலை ரூ.13,999 என பிளிப்கார்ட் இல் விற்பனைக்குக் கிடைக்கும்.

துவக்க விற்பனை சலுகை ரூ.2,000
துவக்க விற்பனை சலுகையாக இன்று ஹனோர் 9என் இன் அணைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.2,000 அதிரடி பிளிப்கார்ட் ஆஃபர் வழங்கியுள்ளது ஹானர் நிறுவனம். இதன் படி ஹானர் 9என் இன் துவக்க விற்பனை விலை
- 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்புடைய மாடல் இன் விலை ரூ.17,999.
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்புடைய மாடல் இன் விலை ரூ.13,999.
- 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்புடைய மாடல் இன் விலை ரூ.11,999 என்ற விற்பனை விலையில் கிடக்கிறது.

இதர சலுகை
இதர துவக்க சலுகைகளாக பிளிப்கார்ட் வட்டி இல்லா கடை வசதியுடன் மாதம் ரூ.2,334 க்கு ஹானோர் 9என் ஐ விற்பனை செய்கிறது. இத்துடன் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதல் சேவையாக ஜியோ பயனர்களுக்கு 100ஜிபி இலவச 4ஜி டேட்டா மைஜியோ(MyJio) ஆப் மூலம் வாங்கும் பயனர்களுக்கு வழங்கப்படும். மிந்த்ரா(Myntra) ஷாப்பிங் வலைத்தளத்தின் வலி வாங்கும் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1,200 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹானர் 9 என் இன் விபரக்குறிப்பு:
- 5.84 இன்ச் எல்சிடி எஃப்எச்டி+, 2280 x 1080 பிக்சல் நோட்ச் டிஸ்பிலே
- 3/4 ஜிபி ரேம் மற்றும் 32/64/128 உள் சேமிப்பு
- 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டிஸ்ப்ளே அளவு: 5.84 இன்ச்
- 13மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் பின் கேமரா
- 16 மெகா பிக்சல் முன் கேமரா
- 3,000 எம்ஏஎச் பேட்டரி
இத்துடன் வைஃபை, ப்ளூடூத்,பிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் என பல சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications