16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.!

குறிப்பாக ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல் ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு நாட்ச் அம்சத்துடன்இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

|

ஹானர் நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக டூயல் கேமரா வசதி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதது. மேலும் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 13எம்பி+2எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனில் நீங்கள் கவனிக்கிற முதல் விஷயம் என்ன? உங்கள் பதில் டிஸ்பிளே, மெமரி, ரேம் போன்றவையாக தான் இருக்கும், ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆக்டோ-கோர் ஹைசிலிகான் கிரின் (HiSilicon Kirin)659 செயலி இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிக அருமையா இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு தகுந்த சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் 9என்

ஹானர் 9என்

குறிப்பாக ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல் ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு நாட்ச் அம்சத்துடன்இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டு ஹானர் 9என் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் வீடியோக்களை பார்க்க மிகவும் வசதியாக இருக்கும். குறிப்பாக பல்வேறு அம்சங்களைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 5.84-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே:

5.84-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே:

ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.84-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் நாட்ச் மற்றும் பெசல்-லெஸ் அமைப்பும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் இடம்பெற்றுள்ளது மிகமிக சிறப்பம்சம் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ஹானர் 9என் ஸ்மார்ட்போனில் 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்ளது என தெரிவிக்கப்பட்படுள்ளது. மேலும் வீடியோ கேம் போன்ற அனுபவத்திற்கு மிக அருமையாக இருக்கும் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இப்போது வந்துள்ள சியோமி புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


குறிப்பாக ஆப் வசதிகளுக்டகு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனில் ஹைசிலிகான் கிரின் 659 செயலி இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்திய சந்தையில் பல்வெறு அம்சங்களை கொண்டு பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுவதால் மிகப்பெரிய வெற்றியைப் பெரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையம் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல். வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பிடம், தேதி மற்றும் நேரம்.!

இருப்பிடம், தேதி மற்றும் நேரம்.!

மேலும் ஹானர் 9என் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா ஆனது ஜியோ-டேகிங்கை (பூகோள-குறியிடுதலை) ஆதரிக்கிறது, இது ஒரு டிஜிட்டல் நேர முத்திரையாக செயல்படுகிறது, இது ஒரு கைப்பற்றப்பட்ட படத்தின் இருப்பிடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் கண்டறியும். தவிர, இதன் இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பானது, நீங்களக் ஷட்டர் பொத்தானை டாப் செய்யும் ஒவ்வொரு முறையும் சரியான ஷாட்டை கைப்பற்ற அனுமதிக்கும் வண்ணம் டச் போகஸ் ஆதரவையும் வழங்குகிறது. உடன் சைகைகள் மற்றும் புன்னகை மூலமாக கூட ஷாட்களை கைப்பற்றலாம்.

மேலும் சிறந்த வீடியோகேம் அனுபவத்திற்கு வேண்டி சிறந்த கிராபிக்ஸ் சிப்செட் வசதி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறம் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளதால்
பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும் முந்தைய ஹானர் ஸ்மார்ட்போன்கள் போன்ற, இதன் கேமரா ஆப் ஆனது பயன்படுத்த
மிகவும் எளிதாக உள்ளது. எளிமை மட்டுமின்றி நிறைய கேமரா அம்சங்களும் உள்ளன. இதன் கேமராவானது செயற்கை நுண்ணறிவின்
கீழ் உங்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிறது. குறிப்பாக போர்ட்ரெயிட் மோட், வைட் அப்பெஷர் மோட், பியூடிப்பை மோட் ஆகிய அனைத்தையும் வெறுமனே கேமரா ஸ்க்ரீனை ஸ்வைப் செய்வதின் வழியாக அணுகலாம். உடன் இந்த கேமரா ஆப் ஆனது ஸ்டாண்டர்ட் போட்டோ, ப்ரோ போட்டோ (மேனுவல் மோட்), வீடியோ, ப்ரோ வீடியோ, எச்டிஆர், நைட் ஷார்ட், பனோரமா, லைட் பெயின்டிங், டைம்-லேப்ஸ், பில்டர்ஸ் மற்றும் பல அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.

ஒரு மெல்லிய மற்றும் ஸ்டைலான வடிவத்தில்.!

ஒரு மெல்லிய மற்றும் ஸ்டைலான வடிவத்தில்.!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது திறன்வாய்ந்த இரட்டை லென்ஸ் கேமராவை மட்டும் கொண்டிருக்கவில்லை. சிறந்த வன்பொருள்
மற்றும் மென்பொருள் அம்சங்களையும் கொண்டுள்ளது. சிறந்த விலையின் கீழ் வாங்க கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில்
ஒன்றான ஹானர் 9என் ஆனது 282பிபிஐ பிக்சல் அடர்த்தி, 16எம் கலர்ஸ் மற்றும் 75.4% ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் கொண்ட டிஸ்பிளேவை
கொண்டுள்ளது. மேலும் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் 4ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி மெமரி வசதியுடன்
வெளிவந்துள்ளது. குறிப்பாக நாளை மதியம் முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று ஹானர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலை புள்ளியில் ஈர்க்கக்கூடிய கேமரா வன்பொருள்.!

பட்ஜெட் விலை புள்ளியில் ஈர்க்கக்கூடிய கேமரா வன்பொருள்.!

இந்திய சந்தையில் மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் இரட்டை லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன் இதுதான். இதன் தீவிர கூர்மையான இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பானது இயற்கைப் படத்தொகுப்பு விளைவுகளுடன் அழகான படங்களை கைப்பற்ற உதவுகிறது. மேலும் இதன் வன்பொருள் வழியிலான பொக்கே விளைவு வேலைகளை இரண்டாம் நிலை கேமரா
பார்த்துக்கொள்ளும்.

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் இருந்து விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக சியோமி நிறுவனம்
இந்த வாரம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்பது எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் டூயல் ரியர் கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வந்ததும் பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை மதியம் பிளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மாடலை மிக எளிமையாக வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Honor 9N is the most stunning phone launched by Honor with a Notch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X