பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் மிரட்டலான ஹானர் 9என் ஸ்மார்ட்போன்.!

ஹானர் 9என் வடிவமைப்பு பற்றி பேசுகையில் ஐபோன் தோற்றத்தை அப்படியே கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

|

ஹானர் நிறுவனம் இந்திய சந்தையில் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் 16எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த
அம்சங்களைக் கொண்ட ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். குறிப்பாக பல்வேறு அம்சங்களை கொண்டு பட்ஜெட் விலையில் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் விற்பனையில் முன்னனியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

<strong>ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.! </strong>ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.!

பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் மிரட்டலான ஹானர் 9என் ஸ்மார்ட்போன்.!

ஹானர் 9என் வடிவமைப்பு பற்றி பேசுகையில் ஐபோன் தோற்றத்தை அப்படியே கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள செல்பீ கேமராவில் ஏஆர் ஸ்டிக்கர், ஏர் எபெக்ட், அழகு பில்டர்கள் போன்றவை இடமபெற்றுள்ளது. மேலும் இந்த ஸமார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது, அதற்கு தகுந்தபடி சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

ஹானர் 9என் ஸ்மார்ட்போன் 16மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் இவற்றுள் 4-இன் 1 லைட் ஃப்யூஷன் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 4 சிறிய பிக்சல்களை 1 பெரிய 2.0um பிக்சலாக மாற்றியமைக்கிறது. மேலும் 3டி தொழில்நுட்பம் போன்ற வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் பல முகங்களுக்கு தகுந்தபடி தனித்தன எபெக்ட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது சிறப்பம் என்றுதான் கூறவேண்டும். சமீபத்திய கேமரா ஸ்மார்ட்போன் டிரெண்ட் ஆன ஒரு 'போர்ட்ரேட்' லைட்டிங் எபெக்ட் மற்றும் பொக்கே எபெக்ட் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன், ஏஐ அடிப்படையிலான வீடியோ கால் பியூடிப்பை, மற்றும் 'ஏஆர் ஸ்டிக்கர்களை' கொண்டுள்ளது, இது பேஷியல் ரிகக்னைசேஷனை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய உதவுகிறது. இந்த அம்சம், ஆப்ஸ்களை லாக் செய்யவும் உதவும். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக் :

ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக் :

மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்களின் வரிசையில் கூடுதலாக, தன்னியக்க கேமரா கூட ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக் வசதி மிகுந்த திறமையுடன் செயல்படுகிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படும் போட்டோ, வீடியோ மற்றும அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

3டி பியூட்டி எபெக்ட்:

3டி பியூட்டி எபெக்ட்:

இந்த ஹானர் 9என் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஒரு அம்சம் உள்ளது, அது என்னவென்றால் 3டி பியூட்டி எபெக்ட், எனவே பல்வேறு இடங்களில் செல்பீ எடுக்கவும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் மிகவும் உதவியாய் இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமராவுக்கும் அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்கக்து.

ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் ஆனது டூயல்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 2எம்பி சென்சார் அமைப்புடைய கேமராக்களைக் கொண்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் பின்புறம் கேமராவில் f/2.2 aperture மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோக்களை மிகத் துல்லியமாக எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராபிக்ஸ் சிப்செட்:
மேலும் சிறந்த வீடியோகேம் அனுபவத்திற்கு வேண்டி சிறந்த கிராபிக்ஸ் சிப்செட் வசதி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறம் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும் முந்தைய ஹானர் ஸ்மார்ட்போன்கள் போன்ற, இதன் கேமரா ஆப் ஆனது பயன்படுத்த மிகவும் எளிதாக உள்ளது. எளிமை மட்டுமின்றி நிறைய கேமரா அம்சங்களும் உள்ளன.

இதன் கேமராவானது செயற்கை நுண்ணறிவின் கீழ் உங்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிறது. குறிப்பாக போர்ட்ரெயிட் மோட், வைட் அப்பெஷர் மோட், பியூடிப்பை மோட் ஆகிய அனைத்தையும் வெறுமனே கேமரா ஸ்க்ரீனை ஸ்வைப் செய்வதின் வழியாக அணுகலாம். உடன் இந்த கேமரா ஆப் ஆனது ஸ்டாண்டர்ட் போட்டோ, ப்ரோ போட்டோ (மேனுவல் மோட்), வீடியோ, ப்ரோ வீடியோ, எச்டிஆர், நைட் ஷார்ட், பனோரமா, லைட் பெயின்டிங், டைம்-லேப்ஸ், பில்டர்ஸ் மற்றும் பல அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது

சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

இந்திய சந்தையில் மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் இரட்டை லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன் இதுதான். இதன் தீவிர கூர்மையான இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பானது இயற்கைப் படத்தொகுப்பு விளைவுகளுடன் அழகான படங்களை கைப்பற்ற உதவுகிறது. மேலும் இதன் வன்பொருள் வழியிலான பொக்கே விளைவு வேலைகளை இரண்டாம் நிலை கேமரா பார்த்துக்கொள்ளும்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக கருப்பு, நீலம் போன்ற பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது, மேலும் 3ஜிபி ரேம்
மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இக்கருவியின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம்
மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 9N Experience the best-in-class selfie performance in the mid-range segment: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X