Home
Mobile

ரூ.6000க்குள் சிறந்த பிராண்டட் ஸ்மார்ட்போன் வாங்கவேண்டுமா? அப்போ இதுதான் பெஸ்ட் சாய்ஸ்!

கொரோனா தொற்றுக்கு பின்னர் லாக்டவுன் காலங்களில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் மலிவு விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் மாடலை தேடி தான் அனைவரின் கவனமும் சென்றுள்ளது. ரூ.10,000-திற்குள் ஒரு அருமையான ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் நபரா நீங்கள்? அல்லது அதைவிட மலிவான விலையில் ரூ.6,000-திற்குள் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் நபரா நீங்கள்? அப்போ இதை படியுங்கள்.

ஹானர் 9A மற்றும் ஹானர் 9S

ஹானர் 9A மற்றும் ஹானர் 9S

ஹானர் தனது சமீபத்திய பட்ஜெட் மைய ஸ்மார்ட்போன்களான ஹானர் 9A மற்றும் ஹானர் 9S ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் கடந்த மாத இறுதியில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பட்டியலில் வெளியிடப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் மீடியா டெக் சிப்செட் மற்றும் ஹவாய் ஆப் கேலரி மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வருகிறது.

ஹானர் 9A ஸ்மார்ட்போன்

ஹானர் 9A ஸ்மார்ட்போன்

ஹானர் 9A ஸ்மார்ட்போன் மாடல், ஆகஸ்ட் 6ம் தேதி 11 மணி முதல் அமேசான் தளத்தில் கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ஹானர் 9A ஸ்மார்ட்போன் ரூ .9,999 என்ற விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையின் போது ரூ.1000 சிறப்பு தள்ளுபடியுடன் ஹானர் 9A ஸ்மார்ட்போன் வெறும் ரூ .8,999 என்ற சிறப்பு விலையுடன் மிட்நைட் பிளாக் மற்றும் பாண்டம் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

ஹானர் 9S ஸ்மார்ட்போன்

ஹானர் 9S ஸ்மார்ட்போன்

ஹானர் 9S ஸ்மார்ட்போன் நாளை 12 மணி முதல் விற்பனையை துவங்குகிறது. தற்பொழுது இந்திய சந்தையில் வெறும் ரூ .6,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் வாங்குவதற்கு கிடைக்கிறது. ஹானர் நிறுவனத்தின் முதல் விற்பனை சிறப்பு தள்ளுபடியாக ரூ. 1000 விலை குறைக்கப்பட்டு வெறும் ரூ .5,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. ஹானர் 9S ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ஹானர் 9A ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

ஹானர் 9A ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

  • 6.3' இன்ச் எச்டி பிளஸ் டியூட்ராப் டிஸ்ப்ளே
  • ஐ.எம்.ஜி பவர்விஆர் GE8320 ஜி.பீ.யு
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசஸர்
  • மேஜிக் UI உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10
  • 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • 512 ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்டோரேஜ்
  • 13 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
  • 5 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
  • 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார்
  • 8 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமரா
  • 5000 எம்.ஏ.எச் பேட்டரி
  • ஹானர் 9S ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

    ஹானர் 9S ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

    • 5.45' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
    • ஐ.எம்.ஜி பவர்விஆர் GE8320 ஜி.பீ.யு
    • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசஸர்
    • மேஜிக் UI உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10
    • 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
    • 512 ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்டோரேஜ்
    • 8 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
    • 5 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமரா
    • 3020 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
HONOR 9A AND HONOR 9S - BEST ALL-ROUNDER BUDGET SMARTPHONES FOR UNDER 10K : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X