Home
Mobile

அல்லு சில்லு பறக்குது.. 200MP அல்ட்ரா கேமரா.. QUAD டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?

"கம்பேக் கொடுத்தால் இப்படி கொடுக்கனும்" என்று உச்சுக்கொட்டும் விதமாக ஹானர் (HONOR) நிறுவனம், உலகின் எந்த போனிலும் கொடுக்கப்படாத டிஸ்பிளே அம்சங்களுடன் ஹானர் 90 (HONOR 90) போனை இந்தியாவில் களமிறக்குகிறது. இதன் மற்ற அம்சங்களும் மார்கெட்டையே அதிர வைக்கும்படி இருக்கிறது.

ஹானர் 90 அம்சங்கள் (HONOR 90 Specification): இந்த ஹானர் போன் 6.7 இன்ச் (2664×1200 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளேவாகும். இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

200MP அல்ட்ரா கேமரா.. 16GB ரேம்.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதோடு 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் பிரம்மாண்ட அம்சமாக 3,840Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் ஃபிரிகொன்சி (Frequency) கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு டிம்மிங் ஃபிரிகொன்சி டெக்னாலஜி கொண்ட ஒரே போனாக ஹானர் 90 மாடல் மட்டுமே இருக்கிறது.

இந்த டெக்னாலஜி மூலம் ஃப்ளிக்கரிங் (Flickering) கன்ட்ரோல் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், ஆட்டோமேட்டிக் பிரைட்னல் லெவல் கன்ட்ரோல், லோவ் ப்ளூ லைட் உள்ளிட்ட பிரத்யேக டிஸ்பிளே டெக்னாலஜி இந்த போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்ட வைடு கலர் காமட் (Wide Color Gamut) டெக்னாலஜி இருப்பதால், கண்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் டிஸ்பிளேவை பார்க்கலாம்.

இந்த போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரையில், ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் கொண்டிருக்கிறது. சிறந்த கேமிங் மற்றும் வீடியோ அனுபவத்துக்காக அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

பிரீமியம் ஹானர் போன்களில் வரும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) வருகிறது. இந்த ஹானர் 90 போன் 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதோடு 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய மூன்று வேரியண்ட்களில் வருகிறது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன் - டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப் - சி ஆடியோ (Type-C Audio), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை - பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) போன்ற அம்சங்கள் வருகின்றன.

இந்த ஹானர் 90 போனில் எம்ரால்டு கிரீன் (Emerald Green), டயமண்ட் சில்வர் (Diamond Silver), பீகாக் ப்ளூ (Peacock Blue) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய நான்கு கலர் வேரியண்ட் இருக்கின்றன. இந்தியாவில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே, அமேசான் (Amazon) தளத்தில் இந்த போனுக்கான மைக்ரோசைட் திறக்கப்பட்டுள்ளதால் அதில் விற்பனை தொடங்குவது உறுதியாகிவிட்டது.

இந்த போனின் விலையை பொறுத்தவரையில், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம். அதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,000 பட்ஜெட்டிலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,000 பட்ஜெட்டிலும் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
HONOR 90 With Eye Protection Display Launch On September 14 in India Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X