Home
News

ஒன்பிளஸ் போன்களை ஓட விடும் பட்ஜெட்.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது Honor போன்..

புதிய ஹானர் 90 போன் ஆனது வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஹானர் நிறுவனம். குறிப்பாக இந்த ஹானர் 90 போன் ஆனது செப்டம்பர் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹானர் 90 போனின் பல்வேறு முக்கிய அம்சங்கள் இணையதளத்தங்களில் வெளிவந்துள்ளது.

இந்த ஹானர் 90 ஸ்மர்ரட்போன் ஆனது வளைந்த டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதாவது ஒன்பளஸ் போன்களில் உள்ள அதே டிஸ்பிளே அம்சத்தை வழங்குகிறது இந்த ஹானர் 90 போன். மேலும் மேஜிக்ஒஎஸ் 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். அதன்பின்பு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது Honor போன்..

அதேபோல் ஜிமெயில் மற்றும் யூடியூப் உள்ளிட்ட கூகுள் சேவைகளை ஃபோன் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு அருமையாக உள்ளது. எனவே இந்த ஹானர் 90 போனுக்கு இநந்தியாவில் நல்ல வரேவுற்பு இருக்கும். இப்போது இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் 90 ஸ்மார்ட்போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஹானர் 90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் அட்ரனோ 644 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது . எனவே மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த அசத்தலான ஹானர் 90 ஸ்மார்ட்போன். குறிப்பாக MagicOS 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது Honor போன்..

ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும்.

5ஜி, 4ஜி,புளூடூத் 5.2, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக ஹானர் 90 போன் இந்தியாவில் ரூ.35,000 பட்ஜெட்டில அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஒன்பிளஸ் போன்களுக்கு போட்டியா இந்த போன் ஹானர் போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 90 with curved display and Google services will be launched in India soon: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X