Home
Mobile

பார்க்கும் போதே டெம்ப்ட் ஆகுதே.. 200MP அல்ட்ரா கிளியர் கேமராவுடன் புதிய Honor போன்.. என்ன விலை? என்ன மாடல்?

ஹானர் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தனது அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ரியல்மி இந்தியா முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் தலைமையில் ஹானார் ஸ்மார்ட்போன்கள் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதன்படி முதலில் ஹானர் 90 (Honor 90) எனும் ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த ஹானர் 90 போனின் சரியான வெளியீட்டுத் தேதியை வெளியிடவில்லை அந்நிறுவனம். இருந்தபோதிலும் அடுத்த மாதம் துவக்கத்தில் இந்த அட்டகாசமான ஹானர் 90 அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

200MP அல்ட்ரா கிளியர் கேமராவுடன் புதிய Honor போன்!

குறிப்பாக 200எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, பெரிய டிஸ்பிளே மற்றும் தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் 90ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஹானர் 90 ஸ்மர்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1 ) சிப்செட் உடன் அட்ரனோ 644 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன். எனவே மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த அசத்தலான ஹானர் 90 ஸ்மார்ட்போன். குறிப்பாக MagicOS 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹானர் 90 ஸ்மார்ட்போன் 200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.

குறிப்பாக இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம். எனவே ஒரு நல்ல கேமரா போன் வாங்க வேண்டும் என்றால் இதை வாங்குவது நல்லது. அதேபோல் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஹானர் 90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

200MP அல்ட்ரா கிளியர் கேமராவுடன் புதிய Honor போன்!

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதற்குத் தகுந்த பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பினே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போனில் புளூடூத் 5.2, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 90 with 200MP camera will be launched in India soon:Check All Details Here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X