Home
Mobile

வந்தா ராஜா தான்.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 12GB ரேம்.. QUAD டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்தியாவில் விட்ட மார்கெட்டை பிடிக்க 200 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் அம்சங்களையும் கொண்ட ஹானர் 90 (HONOR 90) போனை மிட்-ரேஞ்ச் விலையில் களமிறக்குகிறது, ஹானர் (HONOR) நிறுவனம்.

இந்த போன் சீனாவில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பினை பெற்றதால், அதை இந்திய மார்கெட்டில் சோதனை செய்து பார்க்க ஹானர் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த போனின் கேமரா மற்றும் டிஸ்பிளே அம்சங்கள், இந்த விலையில் கிடைத்திராத ஒன்றாக இருக்கிறது. இந்த சூழலில், ஹானர் 90 போன் மோஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) கொண்டிருக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட்ல 200MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த ஹானர் 90 மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? அந்த போனின் விலை எவ்வளவு இருக்கும்? எந்த தேதியில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்துகொள்வோம். இந்த ஹானர் போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் குவாட் கர்வ்ட் ஓஎல்இடி (Quad Curved OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது.

இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) வருகிறது. அதோடு 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் மற்றும் அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போன் 3 மெமரி வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் வருகின்றன. இந்த ஹானர் 90 மாடலில் 200 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

50 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த ஹானர் போன் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த மாடல் எம்ரால்டு கிரீன் (Emerald Green), மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் பீகாக் ப்ளூ (Peacock Blue) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த ஹானர் போன் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அமேசான் (Amazon) தளத்தில் இந்த போனுக்கான மைக்ரோசைட் திறக்கப்பட்டுள்ளது. இந்த போனின் அடுத்தடுத்த அம்சங்கள் அதில் அதிகார்பூர்வமாக வெளியாக இருக்கிறது. அதேபோல விலை குறித்த தகவலும் வெளியாகலாம்.

இந்த போன் ஏற்கனவே சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளாதல், அங்கு அதன் விலையை பற்றி தெரிந்துகொள்வோம். சீனாவில், இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,470ஆகவும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,888ஆகவும் இருக்கிறது.

அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் ரூ.34,166ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த போனை ரூ.30,000 பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். கேமரா பிரியர்களையும், கேமிங் பிரியர்களையும் இந்த ஹானர் 90 போன் கவர அதிக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
HONOR 90 With 200MP Camera Confirmed MagicOS 7 1 Expected Launch Date Price Specification in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X