மிரட்ட வருகிறது.. 200MP அல்ட்ரா கேமரா.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. 12GB ரேம்.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?
"வந்தா ராஜாவா தான் வருவேன்" என்பது போல, ஹானர் (HONOR) நிறுவனமானது, பல ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட ஹானர் 90 (HONOR 90) போனுடன் களமிறங்குகிறது. இந்த போனில் இல்லாத அம்சங்களே கிடையாது என்றே சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு டிஸ்பிளே, கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட் அம்சங்கள் மிகவும் பிரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஹானர் போன் 200 எம்பி மெயின் கேமரா, குவாட் கர்வ்ட் ஓஎல்இடி டிஸ்பிளே, அட்ரினோ 644 கிராபிக்ஸ் கார்டு, 3,840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி என்று மூக்கில் விரல் வைக்கும்படி இருக்கிறது. இந்த போனின் வெளியீட்டு தேதி கசிந்துள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஹானர் 90 அம்சங்கள் (HONOR 90 Specification): இந்த ஹானர் மாடல் 6.7 இன்ச் (2664 × 1200 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+), ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே டிசைன் கொண்ட மாடலாகும்.
இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3,840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த டிம்மிங் ஃபிரிகொன்சி டெக்னாலஜியானது, போனின் ஸ்கிரீன் டிம்மிங், பிரைட்னஸ் லெவல், ஃப்ளிக்கரிங் (Flickering) மற்றும் பேக் லைட் ஆன்-ஆஃப் உள்ளிட்டவையால் கண்களுக்கு ஏற்படும் கோளாறுகளை தவிர்த்துவிடும்.
அதோடு வீடியோ அனுபவத்தையும் கிரிஸ்டல் கிளியராக மாற்றிவிடும். அதோடு, இந்த டிஸ்பிளேவில் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்ட வைடு கலர் கமட் (Wide Color Gamut) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹானர் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) மற்றும் அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU)கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் மிகவும் பிரம்மாண்ட அம்சமாக 200 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் லென்ஸ் என்று டிரிபிள் ரியர் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த ஹானர் போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல 66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போன் மிகவும் ஸ்லிமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், 183 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.
மிட்நைட் பிளாக் (Midnight Black), எம்ரால்டு கிரீன் (Emerald Green), டயமண்ட் சில்வர் (Diamond Silver) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.35,000 அல்லது ரூ.40,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,000 பட்ஜெட்டிலும் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
இந்த போனின் இந்திய வெளியீட்டு தேதி, இப்போது மார்கெட் வட்டாரத்தில் கசிந்துள்ளது. வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. கேமரா, டிஸ்பிளே, சிப்செட் என்று முக்கியமான மூன்றையும் மிகவும் பிரீமியாக கொண்டுள்ள இந்த ஹானர் 90 போன் விற்பனையில் நல்லவரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








