Home
Mobile

வாரி தூக்கும் பட்ஜெட்.. 200MP கேமரா.. 12GB ரேம்.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மீண்டும் கால் பதிக்கப்போகும் ஹானர் நிறுவனம், ரூ.30,000 பட்ஜெட்டில் 200 எம்பி கேமரா, 12ஜிபி ரேம், 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட ஹானர் 90 (HONOR 90) போனை களமிறக்குகிறது.

ஆசியாவின் மிகப்பெரும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் (HONOR), ஒரு காலத்தில் இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் கொடிக்கட்டி பறந்தது. ஆனால், ஹூவாய் (Huawei) நிறுவனத்துடன் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததால், இங்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை நிறுத்தி விட்டது.

200MP கேமரா.. 12GB ரேம்.. QUAD கர்வ்ட் டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆனால், இந்தியா ஸ்மார்ட்போன் மார்கெட்டின் அதீத வளர்ச்சியானது, மீண்டும் ஹானர் நிறுவனத்தை இங்கு களமிறங்க தூண்டிவிட்டுள்ளது. இதனால், அட்டகாசமான அம்சங்களை கொண்ட போன்களை பட்ஜெட் விலையில் களமிறக்கி, விட்ட இடத்தை பிடிக்க ஹானர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தகவல்கள் கசிந்தும், ஹானர் நிறுவனம் அதை உறுதி செய்யாமல் இருந்துவந்தது.

இந்த சூழலில் அந்த நிறுவனமே, ஹானர்டெக் இந்தியா (HONOR Tech India) என்னும் ட்விட்டர் பக்கம் மூலம், அந்த தகவலை உறுதி செய்துள்ளது. இந்த நேரத்தில் ஹானர் 90 போனே முதலில் இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆகவே, அதன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஹானர் 90 அம்சங்கள் (HONOR 90 Specifications): இந்த ஹானர் போன் 6.7 இன்ச் (2664 × 1200 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிபி - பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 3840Hz ஃபிரிகொன்சி PWM டிம்மிங் வருகிறது.

இதுவொரு குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) கொண்ட போனாகும். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மேஜிக் ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ஹானர் 90 போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி என்றும் 3 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனில் பிரம்மாண்டமாக டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, 200 எம்பி மெயின் கேமரா (Main Camera) + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Ultra Wide Camera) + 2 எம்பி டெப்த் சென்சார் (Depth Sensor) வருகிறது. 50 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. அதேபோல 66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்படுள்ளது.

மேலும், இன் - டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப் - சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 5.2, என்எஃப்சி, வை-பை 802 போன்க அம்சங்கள் வருகின்றன. இந்த போன் ஸ்லிம் டிசைன் கொண்டிருப்பதால், 183 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

இந்த ஹானர் 90 போன் மிட்நைட் பிளாக் (Midnight Black), எமரால்டு கிரீன் (Emerald Green), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் பீகாக் ப்ளூ (Peacock Blue) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 29,170ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,670ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,005ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் சீனாவில் ஜூன் 7ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துவிட்டது. வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த போனின் அம்சங்களை வைத்து பார்க்கையில், மிகப்பெரும் வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR 90 With 200MP Camera, 16GB RAM, 5000mAh Battery in India Soon Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X