அசூர ஆஃபர்.. ரூ.10000 கட்.. HONOR கம்பேக்.. 200MP கேமரா.. 13GB ரேம்.. QUAD டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஹானர் 90 (HONOR 90) போனுடன் களமிறங்கிய ஹானர் (HONOR) நிறுவனம், மார்கெட்டே அதிரும்படியான சலுகைகளை அந்த போனுக்கு அறிவித்துள்ளது. 200எம்பி கேமரா, 13ரேம், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே போன்ற அம்சங்களில் ஹானர் 90 பின்னிப்பெடல் எடுக்கிறது.
ஹானர் 90 அம்சங்கள் (HONOR 90 Specification): இந்த ஹானர் போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு 360Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) வருகிறது. இந்த ஹானர் 90 போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) உடன் 2.5GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (2.5GHz Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வருகிறது.
கேமிங் பிரியர்களுக்காக அட்டகாசமான அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹானர் மாடல்களில் வரும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) வருகிறது. இந்த ஹானர் போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த 8 ஜிபி மாடலில் 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. அதோபோல 12 ஜிபி ரேம் மாடலில் 7 ஜிபி மெமரி வருகிறது. இந்த போனில் 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி (மேக்ரோ ஆப்சன்) டெப்த் லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.
50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வருகிறது. இந்த மாடலில் 66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 கலர்களில் இன்று (செப்டம்பர் 14) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளுக்கு பிறகு ஹானர் நிறுவனத்தின் புதிய போன் இந்தியாவில் விற்பனைக்கு வருவதால், பிரம்மாண்ட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒவ்வொரு மாடலுக்கும் முழுதாக ரூ.10,000 குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, 8 ஜிபி மாடலை ரூ.27,999க்கும் 12 ஜிபி மாடலை ரூ.29,999க்கும் வாங்கிக்கொள்ள முடியும். அதோடு பல்வேறு அறிமுக சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த மாடல்களை ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ ஆகிய வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.3000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.
அதேபோல 24 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகை கொடுக்கப்படும். மேலும், ரூ.3000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் 30 நாட்கள் ரீ-பிளேஸ்மென்ட் பாலிசி போன்ற சலுகை கிடைக்கிறது. இதற்கும் மேலாக ரூ.5000 மதிப்பில் இலவச இயர்பட்ஸ் உள்பட இதர சார்ஜர், கேபிள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இந்த போனின் விற்பனை வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) தளத்தில் தொடங்குகிறது. அதே தேதி முதல் ஆப்லைன் ஸ்டோர்கள் மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களிலும் ஹானர் 90 மாடல் விற்பனைக்கு கிடைக்கும். 200 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 5,000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்கள் கொண்ட போன் வெறும் ரூ.27,000 பட்ஜெட்டில் கிடைப்பது முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications








