Home
Mobile

முழுசா வேற மாதிரி.. 200MP கேமரா.. 12GB ரேம்.. QUAD டிஸ்பிளே.. வெயிட்டிங் ஓவர்.. எந்த மாடல்?

"முழுசா வேற மாதிரி வந்துருக்கு' என்று ஹானர் பிரியர்கள் காலரை தூக்கிவிட்டு சொல்லும்படி, 200எம்பி கேமரா, 12ஜிபி ரேம், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, 66W சார்ஜ், 5,000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ஹானர் 90 (HONOR 90) போன் நாளை வெளியாகிறது.

ஹானர் 90 அம்சங்கள் (HONOR 90 Specification): இந்த ஹானர் போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (2664×1200 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

வெயிட்டிங் ஓவர்! 200MP கேமரா.. 12GB ரேம்.. QUAD டிஸ்பிளே.. எந்த மாடல்?

அதுமட்டுமல்லாமல், 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) வருகிறது. இவ்வளவு டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த டெக்னாலஜியானது, டிஸ்பிளேவின் ஸ்கிரீன் டிம்மிங், பிரைட்னஸ் லெவல், ஃப்ளிக்கரிங் (Flickering) மற்றும் பேக் லைட் ஆன்-ஆஃப் போன்றவையால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு ஃபிரிகொன்சி செட்டப் கொண்டிருக்கும்.

இதனால், வீடியோ அனுபவம், நேரில் பார்க்கும் அளவுக்கு கிரிஸ்டல் கிளியராக இருக்கும். அதேபோல இந்த ஓஎல்இடி டிஸ்பிளேவில் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்ட வைடு கலர் கமட் (Wide Color Gamut) வருவதால், ஒரு சாதாரண வீடியோவையும் தரமானதாக எடுத்துக்காட்டும். இப்படி டிஸ்பிளேவில் பல்வேறு பிரீமியம் டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஹானர் 90 மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் வருகிறது. அதோடு அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஹானரின் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) வருகிறது.

இந்த ஹானர் போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. ஆனால், இந்தியாவில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடல் மட்டுமே விற்பனைக்கு வருவது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 11ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த போனில் டிஸ்பிளேவுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரம்மாண்டமான அம்சமாக டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் பார்க்கப்படுகிறது. 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் லென்ஸ் வருகிறது. அதேபோல 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹானர் 90 போன் 66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த பேட்டரியுடன் சேர்ந்து மிகவும் ஸ்லிமான டிசைனில் 183 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. மிட்நைட் பிளாக் (Midnight Black), பீகாக் ப்ளூ (Peacock Blue), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.35,000 முதல் ரூ.40,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த போன் நாளை (செப்டம்பர் 14) பிற்பகல் 12.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போனுக்கான மைக்ரோசைட் ஏற்கனவே அமேசான் (Amazon) தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அமேசானில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஹானர் நிறுவனம், இந்தியாவில் புதிய போனை அறிமுகம் செய்வதால், விலையில் நல்ல சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது. அதோடு பல புதிய அம்சங்கள் மற்றும் பிரம்மாண்ட கேமரா கொண்டிருப்பதால், விற்பனையிலும் மிகப்பெரும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
HONOR 90 With 12GB RAM, 200MP Camera, Launch on September 14 in India Price Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X