Home
Mobile

ஆர்டர் செஞ்சிரலாமா? 200MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எல்லாமே பெஸ்ட்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 16ஜிபி ரேம், 200எம்பி கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, குவாட் கர்வ்ட் டிஸ்பிளே போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் மிட்-ரேஞ்ச் விலைக்கு வரவிருக்கும் ஹானர் 90 (HONOR 90) மாடலில், எந்த போனும் கொண்டிருந்த கலர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் 90 அம்சங்கள் (HONOR 90 Specification): இந்த ஹானர் 90 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) கொண்டிருக்கிறது. கேமிங் பிரியர்களுக்காகவே பிரத்யேகமாக அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU)கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

200MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. பெஸ்ட் போன்.. எந்த மாடல்?

இந்த போன் 6.7 இன்ச் (2664 × 1200 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவாரும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டைனாமிக் டிம்மிங் (Dynamic Dimming), சர்க்காடியன் நைட் டிஸ்பிளே (Circadian Night Display) போன்ற டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இதுவரை பயன்படுத்திய போன்களைவிட இந்த போனின் டிஸ்பிளே கிரிஸ்டல் கிளியர் வீடியோ அனுபவத்தை கொடுக்கப்போகிறது.

இந்தியாவில் கேமராவுக்கான முக்கியத்துவத்தை அறிந்த ஹானர் நிறுவனம், 200 எம்பி மெயின் கேமரா கொண்ட இந்த போனை முதலில் களமிறக்க திட்டுள்ளது. அதோடு 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் லென்ஸ் என்று டிரிபிள் ரியர் கேமரா செட்டப் வருகிறது. 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹானர் மாடலில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஹானர் மாடல் எம்ரால்டு கிரீன் (Emerald Green), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் டயமண்ட் சில்வர் (Diamond Silver) ஆகிய 3 கலர்களில் கிடைக்கிறது. இப்போது, பீகாக் ப்ளூ (Peacock Blue) என்னும் நான்காவது கலர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கலர் மாடல் ஐரோப்பிய நாடுகளில் விரைவில் விற்பனைக்கு கிடைக்கவிருக்கிறது.

சொல்லப்போனால், இந்த புதிய கலர் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்க அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. ஏனென்றால், பல ஆண்டுகளுக்கு பின் ஹானர் நிறுவனம் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி இந்தியாவில், புது மாடல் போனை களமிறக்க இருக்கிறது.

இந்த போன் கிட்டத்தட்ட ஹானர் 90 மாடல் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த சூழலில் புதிய கலர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் ஏற்கனவே, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வந்து, பிரம்மாண்ட வரவேற்பு பெற்றுள்ளது. சீனாவில், இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.28,470ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.31,888ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.34,166ஆகவும் இருக்கிறது. அந்த வகையில், இந்த போன் ரூ.30 பட்ஜெட்டில் இந்தியாவில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வெறும் ரூ.30,000 பட்ஜெட்டில் 200 எம்பி கேமரா, ஓஎல்இடி குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 5,000mAh பேட்டரி போன் பிரம்மாண்ட அம்சங்களுடன் கிடைக்கும் ஹானர் போன் விற்பனையில் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR 90 With 12GB RAM, 200MP Camera, 5000mAh Battery Gets New Color Here Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X