Home
Mobile

அரளுது ஆஃபர்.. வெறும் ரூ.26,999 போதும்.. 200MP கேமரா.. QUAD டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மார்கெட் மிரளும் 200எம்பி கேமராவுடன் வெளியான ஹானர் 90 போனுக்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) ரூ.11,000 டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் அம்சங்கள் என்ன? டிஸ்கவுண்ட்டை பெறுவது எப்படி? விவரம் இதோ.

ஹானர் 90 அம்சங்கள் (HONOR 90 Specification): இந்த ஹானர் 90 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (2.5GHz Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்ட மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) வருகிறது.

வெறும் ரூ.26,999 போதும்.. 200MP கேமரா.. QUAD டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹானர் 90 போனில் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) (Quad Curved OLED) குவாட் கர்வ்ட் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) வருகிறது.

அதோடு 360Hz டச் சாம்பிளிங் ரேட் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹானர் மாடலில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. 8 ஜிபி மாடலில் 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது.

இந்த போனில் பிரம்மாண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இந்த டெப்த் கேமராவில் மேக்ரோ ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 கலர்கள் கிடைக்கின்றன. இந்த ஹானர் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த மெயின் மற்றும் செல்பீ கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் மற்றொரு பிரம்மாண்ட அம்சமாக 66W சூப்பர் சார்ஜ் (Super Charge) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.

இந்த போனின் அம்சங்களுக்கு, இது ஏற்ற விலையாக இருப்பதால், இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் விற்பனையை பதிவு செய்தது. இந்த விற்பனையை மேலும் அதிகரிக்க வரும் அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் பிரம்மாண்ட ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் 8 ஜிபி மாடலுக்கு ரூ.7000 ஃபெஸ்டிவல் டிஸ்கவுண்ட்டும், ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்ட்டும் வழங்கப்படுகிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டை எஸ்பிஐ (SBI) வங்கி கார்டுகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல 12 ஜிபி மாடலுக்கு ரூ.6000 ஃபெஸ்டிவல் டிஸ்கவுண்ட்டும், ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்ட்டும் வழங்கப்படுகிறது.

ஆகவே, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலை ரூ.26,999க்கும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.29,999க்கும் பெற்றுக்கொள்ள முடியும். 200 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், அமோலெட் கர்வ்ட் டிஸ்பிளே போன்ற அம்சங்களை கொண்ட போன், இவ்வளவு மலிவான விலைக்கு கிடைப்பதால், நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 90 Under Rs 30000 With Discount During Amazon Great Indian Festival Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X