கேமரா கிங் வரார் வழி விடுங்கோ.. OnePlus, Nothing-லாம் கொஞ்சம் ஓரம் போங்கோ.. என்ன விலை? என்ன மாடல்?
ஹானர் நிறுவனம் நிறுவனம் மீண்டும் இந்தியச் சந்தையில் தனது சாதனங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் துவக்கம் முதல் இந்த ஹானர் சாதனங்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. முதலில் ஒரு அட்டகாசமான 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம்.
அதாவது ஹானர் 90 (Honor 90) எனும் பெயரில் 5ஜி போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஹானர் 90 போன் அடுத்த மாதம் அல்லது செப்டம்பரில் வெளியிடப்படலாம். தற்போது இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன.

அதன்படி ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.45,000-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் இருக்கும். அதேபோல் நத்திங் போன் 2, ஒன்பிளஸ் 11ஆர், கூகுள் பிக்சல் 7ஏ உள்ளிட்ட போன்களுக்கு போட்டியாகத் தான் இந்த ஹானர் 90 வெளிவருகிறது.
6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக AMOLED டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1 ) சிப்செட் உடன் அட்ரனோ 644 ஜிபியு வசதியைக் கொண்டு இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போனில் MagicOS 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஹானர் 90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.
குறிப்பாக நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் 90 ஸ்மார்ட்போன். மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன். எனவே குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் கூட இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் 50எம்பி செல்பி கேமராவுடன் இந்த ஹானர் போன் இந்தியாவில் அறிமுகமாகும்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பினே கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.2, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








