Home
Mobile

மார்க்கெட்டையே தூக்கிசாப்பிடும் மாடல்.. ரீ-என்ட்ரி கொடுக்கும் ஹானர்.. அதும் கம்மி விலையில்.. எந்த போன்?

இந்திய மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்டு வந்த ஹானர் நிறுவனம், 2020 ஆண்டில் புது மாடல் போன்களை அறிமுகம் செய்வதை நிறுத்தி விட்டது. ஆனால், இப்போது, விட்ட இடத்தை பிடிக்க பிரம்மாண்டகேமரா மற்றும் டிஸ்பிளே அம்சங்களுடன் கூடிய போன்களை பட்ஜெட் விலையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய மாதவ் சேத் இந்தியாவில் ஹானர் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். அடுத்த மாதத்தில் இருந்து வரிசையாக புதுப்புது மாடல் போன்கள் வெளியாக இருக்கின்றன. இந்த ரீ-என்ட்ரி மாடல்களின் அம்சங்களையும் விலையையும் கேட்டால் அதிர்ந்துபோய் விடுவீர்கள்.

மார்க்கெட்டையே தூக்கி சாப்பிடும் மாடல்! கம்மி பட்ஜெட்டில் 100MB கேமரா!

சீனாவில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ஹானர் 90 சீரிஸ் (HONOR 90 Series) மாடல்கள், உலகின் எந்த போன்களிலும் இல்லாத 3,840Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் டிஸ்பிளே பிரிகொன்சியை கொண்டிருந்தது. இந்த டிஸ்பிளேவில் வீடியோக்களை பார்த்தால், நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தை கொடுப்பதாக அந்த போனை பயன்படுத்திவர்கள் தெரிவித்து வருவதால் மற்ற நாடுகளிலும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 32 எம்பி டூயல் செல்பீ கேமரா என்று கேமராவிலும் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த மாடல்களே இந்தியாவில் முதலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த சீரிஸ் மாடல்களில், ஹானர் 90 லைட் வேரியண்ட்டின் விலையை கேட்டால் வியந்து போய்விடுவீர்கள், அவ்வளவு கம்மியாக இருக்கிறது.

ஹானர் 90 லைட் அம்சங்கள் (HONOR 90 Lite Specification): இந்த ஹானர் போன் 6.7 இன்ச் (2388x1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ், டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளே அனுபவத்தை பெற 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் கொண்ட வைடு கலர் காமட் (Wide Color Gamut) கொடுக்கப்பட்டுள்ளது.

இது உங்களுக்கு நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தை வீடியோவில் கொடுக்கும். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் (MediaTek Dimensity 6020) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி ஜி57 எம்சி2 (Mali-G57 MC2) வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது.

100 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி வைடு மற்றும் டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்று டிரிபிள் லேயர் பேக் கேமரா செட்டப் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 35W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. மிகவும் ஸ்லிம் டிசைன் கொண்டிருப்பதால் வெறும் 179 கிராம் எடை மட்டுமே இருக்கிறது.

மிட்நைட் பிளாக் (Midnight Black), டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் சியான் லேக் (Cyan Lake) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் ஜூன் 23ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, வெறும் ரூ.25,453 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் மட்டுமே ஆர்டர் செய்துகொள்ள முடியும்.

அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR 90 Series HONOR 90 Lite Specification, Price Expected Launch Date in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X