Home
Mobile

இதுக்கு மேல என்ன வேணும்.. 200எம்பி கேமரா.. 6.7-இன்ச் டிஸ்பிளே.. 512 ஜிபி மெமரி.. பட்ஜெட் விலை.. எந்த மாடல்?

ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு விலை மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன. மேலும் இந்த போன் குறித்து விரிவான தகவலைப் பார்ப்போம்.

அதாவது ஹானர் 90 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் (Midnight Black), எம்ரால்டு கிரீன் (Emerald Green), டயமண்ட் சில்வர் (Diamond Silver) ஆகிய 3 கலர்களில் வெளிவரும். மேலும் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் ஆனது குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்கு மேல என்ன வேணும்..200எம்பி கேமரா, 512 ஜிபி மெமரி..எந்த மாடல்?

ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,000 விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஹானர் ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

ஹானர் 90 ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+), ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3,840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

இந்த போனில் இருக்கும் டிம்மிங் ஃபிரிகொன்சி டெக்னாலஜியானது, போனின் ஸ்கிரீன் டிம்மிங், பிரைட்னஸ் லெவல், ஃப்ளிக்கரிங் (Flickering) மற்றும் பேக் லைட் ஆன்-ஆஃப் உள்ளிட்டவையால் கண்களுக்கு ஏற்படும் கோளாறுகளை தவிர்த்துவிடும். குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஹானர் 90 டிஸ்பிளேவில் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்ட வைடு கலர் கமட் (Wide Color Gamut) கொடுக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் அட்ரனோ 644 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் ஸ்மார்ட்போன்.

MagicOS 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ எடிட்டிங் ஆப் மறறும் கேமிங் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

200எம்பி பிரைமரி கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது ஹானர் 90 போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இதுக்கு மேல என்ன வேணும்..200எம்பி கேமரா, 512 ஜிபி மெமரி..எந்த மாடல்?

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் 90 போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது.

66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது ஹானர் 90 போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, 4ஜி, புளூடூத் 5.2, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது அமேசானில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 90 phone specifications and price range leaked online: check all details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X