அறக்க பறக்கும் ஆஃபர்.. 200எம்பி கேமரா.. 65W சார்ஜிங்.. குறைந்த விலையில் ஹானர் போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஹானர் டேஸ் சேல் எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் டிசம்பர் 8-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஹானர் 90 ஸ்மார்ட்போனுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 90 போன் தற்போது ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.36,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்நிலையில் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஹானர் 90 போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும்.

எனவே 8ஜிபி ரேம் கொண்ட ஹானர் 90 (HONOR 90) போனை ரூ.31,999 விலையிலும், இதன் 12ஜிபி ரேம் கொண்ட வேரியண்டை ரூ.33,999 விலையிலும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சிறப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஹானர் ௯௦ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த ஹானர்90 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே கொண்டுள்ளது. டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி (மேக்ரோ ஆப்சன்) டெப்த் லென்ஸ் என்கிற டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 90 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹானர் போன்
இதுதவிர இந்த கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வருகிறது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (2.5GHz Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது ஹானர்90 போன்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயங்குகிறது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பிரியர்களுக்காக அட்டகாசமான அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹானர் மாடல்களில் வரும் மேஜிக்ஓஎஸ் 7.1(MagicOS 7.1) இதில் வருகிறது.

6W சூப்பர்சார்ஜ் (SuperCharge) கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஹானர்90 ஸ்மார்ட்போன் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








