மிரண்டு போகும் கேமரா.. 200 எம்பி மெயின்.. 50 எம்பி செல்பீ.. 12 எம்பி அல்ட்ரா.. எந்த மாடல்?
ஒரு மிட்-ரேன்ஞ் விலை போனில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) போனில் கொடுக்கப்பட்ட கேமராவுக்கு நிகரான சென்சார்கள் அம்சங்களும் கூடவே 50 எம்பி செல்பீ கேமராவும் கொண்டு ஹானர் 90 (Honor 90) மாடல் வெளியாகியது.
ஹானர் (Honor) நிறுவனத்தின் போன்களில் கொடுக்கப்படும் பிரம்மாண்ட டிஸ்பிளே மற்றும் கேமரா பற்றி இந்தியாவில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாம்சங், ஆப்பிள் போன்களுக்கு நிகரான கேமராவை கொடுக்கும் ஹானர், இந்தியாவில் மலிவு விலை போன்களுக்கு மட்டுமே வரவேற்பு இருப்பதாக எண்ணி அந்த விலைக்கான அம்சங்களுடன் போன்களை களமிறக்கியது.

இதனால் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே பெயர்பெற முடியாமல் போய்விட்டது. மற்ற போட்டி நிறுவனங்களும் ஹானர் போன்களை மறக்க செய்துவிட்டன. ஆனால், இப்போது, கதையே வேறு, மிட்-ரேன்ஞ் விலையில் பிரம்மாண்ட கேமரா அம்சங்களுக்கு புது போன்களை களமிறக்கி, விட்ட இடத்தை பிடிக்க திட்டமிட்டு வருகிறது.
அந்த வரிசையில், சீனாவில் வெளியாகி கேமராவுக்கே மிகப்பெரும் வரவேற்பை பெற்ற, ஹானர் 90 மாடலை மற்ற நாடுகளில் விற்பனைக்கு களமிறக்கி வருகிறது. இப்போது, இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன் இந்தியாவில் எப்போது வெளியாகும்? அதன் அம்சங்கள் என்ன உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.
ஹானர் 90 அம்சங்கள் (Honor 90 Specifications): இந்த போன் 6.7 இன்ச் (2664*1200) ஃபுல்எச்டி பிளஸ் ஓஎல்இடி (OLED)டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 3,840Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
இந்த ஹானர் 90 போன் 200 எம்பி மெயின் + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் என்ற டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) உடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது.
இந்த போன் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என்று இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மிட்நைட் பிளாக் ( Midnight Black), எமரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் டயமண்ட் சில்வர் (Diamond Silver) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த போனின் விலையை பொறுத்தவரையில், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.40,415 க்கும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.44,930 க்கும் விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது, இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹானர் 90 மாடல் குளோபல் வேரியண்ட் என்ற அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








