விஸ்வரூப மாடல்.. 50எம்பி செல்பி கேமரா.. 200எம்பி ரியர் கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த போன்?
ஹானர் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் ஹானர் 90 எனும் புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, இந்த புதிய ஹானர் 90 (Honor 90) போன் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் BIS சான்றிதழ் இணைய தளத்தில் புதிய ஹானர் போன் காணப்பட்டுள்ளது.
அதாவது BIS சான்றிதழ் இணைய தளத்தில் REA-NX9 என்ற மாடல் எண்ணுடன் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் ஹானர் 90 என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஹானர் 90. அதேபோல் ஒன்பிளஸ் போன்களுக்கு போட்டி தரும் விதமாக இந்த ஹானர் 90 போன் இந்தியாவுக்கு வரு இருக்கிறது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+), ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவுடன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3,840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள டிம்மிங் ஃபிரிகொன்சி டெக்னாலஜியானது, போனின் ஸ்கிரீன் டிம்மிங், பிரைட்னஸ் லெவல், ஃப்ளிக்கரிங் (Flickering) மற்றும் பேக் லைட் ஆன்-ஆஃப் உள்ளிட்டவையால் கண்களுக்கு ஏற்படும் கோளாறுகளை தவிர்த்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்ட வைடு கலர் கமட் (Wide Color Gamut) கொடுக்கப்பட்டுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் அட்ரனோ 644 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன். MagicOS 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் பிரம்மாண்ட அம்சம் என்னவென்றால் அது கேமரா தான். அதாவது 200எம்பி ரியர் கேமராவுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் பின்புறம் 200எம்பி பிரைமரி கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் லென்ஸ் ஆகிய மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது ஹானர் 90 போன்.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் 90 போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது.

66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது ஹானர் 90 போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேசமயம் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மிட்நைட் பிளாக் (Midnight Black), எம்ரால்டு கிரீன் (Emerald Green), டயமண்ட் சில்வர் (Diamond Silver) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வரும் இந்த ஹானர் 90 போன்.
குறிப்பாக மிகவும் மெலிதான வடிவமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் 90 ஸ்மார்ட்போன். பின்பு 5ஜி, 4ஜி, புளூடூத் 5.2, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. இந்தியாவில் ரூ.35,000 பட்ஜெட்டில் ஹானர் 90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








