Home
Mobile

வாங்காம விட மாட்டீங்க.. 200MP கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. பட்ஜெட் விலையில் புதிய Honor போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹானர் 90 என்ற அசத்தலான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஹானர் நிறுவனம். அதாவது இந்த புதிய ஹானர் 90 போன் ஆனது வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் ஹானர் 90 போனின் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி ரூ.35,000 பட்ஜெட்டில் இந்த ஹானர் 90 போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒன்பிளஸ் 11ஆர், கூகுள் பிக்சல் 7ஏ, நத்திங் போன் 2 போன்ற பிரபலமான போன்களுக்கு போட்டியா இந்த ஹானர் 90 போன் வெளிவர இருக்கிறது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. பட்ஜெட் விலையில் புதிய Honor போன்.. எந்த மாடல்?

ஹானர் 90 அம்சங்கள்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் அட்ரனோ 644 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன். எனவே மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த அசத்தலான ஹானர் 90 ஸ்மார்ட்போன். குறிப்பாக MagicOS 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் 90 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம். மேலும் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஹானர் 90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதற்குத் தகுந்த பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். பின்பு 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. பட்ஜெட் விலையில் புதிய Honor போன்.. எந்த மாடல்?

ஹானர் 90 ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி, புளூடூத் 5.2, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. அதேபோல் டால்பி ஆடியோ அம்சம் இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 200எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி செல்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஹானர் 90 போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 90 India price leaked online: Check Specifications, launch date, and more: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X