அதிரடி என்ட்ரி கொடுக்கும் ஹானர்.. 24GB ரேம்.. 90W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்தியாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் ஹானர் 90ஜிடி எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதாவது டூயல் ரியர் கேமரா, ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் பல முக்கியமான சிறப்பு அம்சங்களுடன் ஹானர் 90ஜிடி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஹானர் 90ஜிடி (Honor 90 GT) போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் 90ஜிடி அம்சங்கள் (Honor 90 GT specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் (Snapdragon 8+ Gen 1 SoC) வசதியுடன் இந்த ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் அண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 24ஜிபி ரேம் + 1டிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் 90ஜிடி விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இந்த போனில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் கேமிங் வசதிக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.
5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (90W fast charging support) உள்ளது. குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே ஆனது சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் வெளியான தகலின்படி, ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

குறிப்பாக 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. மேலும் ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் ஹானர் நிறுவனம் விரைவில் இந்தியாவில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தற்போது தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








