மிரண்டு போவீங்க.. ரூ.30,000 போதும்.. OASIS டிஸ்பிளே.. 12GB ரேம்.. OIS கேமரா.. 100W சார்ஜ்.. எந்த போன்?
வெறும் ரூ.30,000 பட்ஜெட்டில் சோனி சென்சார் கேமரா, 100W சூப்பர்சார்ஜ், 12ஜிபி ரேம், 10X டிஜிட்டல் ஜூமிங், அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களுடன் ஹானர் 90 ஜிடி (HONOR 90 GT) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹானர் 90 ஜிடி அம்சங்கள் (HONOR 90 GT Specifications): இந்த போனின் டிஸ்பிளே அல்ட்ரா பிரீமியமாக இருக்கிறது. 6.7 இன்ச் (2664 x 1200 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது.

ஹானர் ஓசிஸ் ஐ புரொடெக்சன் (Honor Oasis Eye Protection) டென்க்னாலஜி கொண்டுள்ளது. அதேபோல மல்டி-ஃபிங்கர் டச் என்ஹான்ஸ்மெண்ட் அல்கோரிதம் (Multi-finger Touch Enhancement Algorithm) கொண்டிருக்கிறது. மேஜிக் யுஐ 7.2 (Magic UI 7.2) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் மொபைல் சிப்செட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஹானர் 90 ஜிடி போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
அதோடு 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த ஹானர் போனில் மேக்ரோ சப்போர்ட் கொண்ட டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) வருகிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்800 (Sony IMX800) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த கேமராவில் மேக்ரோ ஆப்சன் இருக்கிறது. அதோடு எல்இடி ஃபிளாஷ் இடம் பெற்றுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மாடலாகும். 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது.
அதேபோல வெண்டர்ஃபுல் ஸ்னாப்ஷாட்ஸ் (Wonderful Snapshots), டைனாமிக் போட்டோஸ் (Dynamic Photos), டைம்-லேப்ஸ் போட்டோகிராபி (Time-lapse Photography), ஏஐ போட்டோகிராபி (AI Photography), சூப்பர் வைடு ஆங்கிள் (Super Wide Angle), மல்டி லென்ஸ் ரெக்கார்டிங் (Multi-lens Recording) போன்ற பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன.
அதேபோல நைட் சீன் மோட் (Night Scene Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பிரபலமான மோட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனில் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது.

இந்த ஹானர் 90 ஜிடி போனில் ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் (Stereo Dual Speakers), டிடிஎஸ் (DTS) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் கேமிங் பிரியர்களுக்கான எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் (X-axis Linear Motor) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 100W சூப்பர்சார்ஜ் (SuperCharge) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஜிடி ப்ளூ (GT Blue), பிளேஸிங் கோல்டு (Blazing Gold) மற்றும் ஸ்டார்லைட் பிளாக் (Starlight Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.30,300ஆக இருக்கிறது.
அதேபோல 16ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.33,800ஆகவும், 16ஜிபி + 512ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.38,235ஆகவும் இருக்கிறது. அதோடு 24ஜிபி + 1டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,210ஆக இருக்கிறது. வரும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. அதன்பின் அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








