மிரளுது ஆர்டர்.. ரூ.30,000 பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. 10X ஜூமிங்.. OIS கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?
100W ஃபாஸ்ட் சார்ஜிங், 12ஜிபி ரேம், ஓஐஎஸ் கேமரா, சோனி சென்சார், 10X டிஜிட்டல் ஜூமிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பக்கா அம்சங்களை கொண்ட ஹானர் 90 ஜிடி (HONOR 90 GT) போன் வெறும் ரூ.30,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஹானர் 90 ஜிடி அம்சங்கள் (HONOR 90 GT Specifications): இந்த ஹானர் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm mobile) சிப்செட் வருகிறது.

அதோடு மேஜிக் யுஐ 7.2 (Magic UI 7.2) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி, 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி, 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 24ஜிபி ரேம் + 1டிபி மெமரி என்று 4 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.
ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டுமே வருகிறது. இந்த ஹானர் 90 ஜிடி போனில் 6.7 இன்ச் (2664 x 1200 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.
மல்டி-ஃபிங்கர் டச் என்ஹான்ஸ்மெண்ட் அல்கோரிதம் (Multi-finger Touch Enhancement Algorithm) மற்றும் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த ஹானர் 90 ஜிடி போனில் சோனி ஐஎம்எக்ஸ்800 (Sony IMX800) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

இந்த வைடு ஆங்கிள் கேமராவில் மேக்ரோ ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி, 4K வீடியோ ரெக்கார்டிங், 10X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. அதோடு வெண்டர்ஃபுல் ஸ்னாப்ஷாட்ஸ் (Wonderful Snapshots), டைனாமிக் போட்டோஸ் (Dynamic Photos) போன்ற பிரத்யேக கேமரா பீச்சர்கள் வருகிறது.
அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மேலும், ஏஐ போட்டோகிராபி (AI Photography), டைம்-லேப்ஸ் போட்டோகிராபி (Time-lapse Photography), மல்டி லென்ஸ் ரெக்கார்டிங் (Multi-lens Recording), சூப்பர் வைடு ஆங்கிள் (Super Wide Angle), நைட் சீன் மோட் (Night Scene Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன.
இந்த ஹானர் 90 ஜிடி போனில் 100W சூப்பர்சார்ஜ் (SuperCharge) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டிடிஎஸ் (DTS) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் வருகிறது.

5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.3, வை-பை 802 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்விட்டிகளை கொண்டுள்ளது. இந்த ஹானர் போனில் பிளேஸிங் கோல்டு (Blazing Gold), ஜிடி ப்ளூ (GT Blue) மற்றும் ஸ்டார்லைட் பிளாக் (Starlight Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,300ஆகவும், 16 ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.33,800ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.38,235ஆகவும் இருக்கிறது. அதேபோல 24ஜிபி + 1டிபி மெமரி மாடலின் விலை ரூ.44,210ஆக இருக்கிறது.
இந்த ஹானர் போன் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மலிவான விலையில் சிப்செட், ரேம் மற்றும் பேட்டரி அம்சங்களில் பின்னிபெடல் எடுப்பதால், மிகப்பெரும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. இந்த ஹானர் 90 ஜிடி போன் வரும் வாரங்களில் அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








