அதிரும் மார்க்கெட்.. 100W சார்ஜிங்.. 24ஜிபி ரேம்.. வருகிறது ஹானர் போன்.. எந்த மாடல்?
இந்தியாவில் ஹானர் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஹானர் 90 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது ஹானர் 90 ஜிடி எனும் போனை தான் விரைவில் இந்தியா மற்றும் உலக சந்தைகளில் அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக ஹானர் 90 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஹானர் 90 ஜிடி போனின் புகைப்படம் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் ஹானர் 90 ஸ்மார்ட்போனை விட இந்த ஹானர் 90 ஜிடி போன் ஆனது சற்று குறைந்த விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஹானர் 90 ஜிடி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சங்கள் இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழக்கும். அதேசமயம் சில நிமிடங்களில் இந்த ஹானர் 90 ஜிடி ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்குத் தகுந்தபடி பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் (Snapdragon 8+ Gen 1 SoC) வசதியுடன் இந்த ஹானர் 90 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். அதேசமயம் கேமிங் ஆப்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை இந்த போன்களில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் போனின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஹானர் 90 ஜிடி வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 24ஜிபி ரேம் + 1டிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் 90 ஜிடி விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. மேலும் இந்த ஹானர் 90 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








