ஆரம்பமே ரூ.5000 தள்ளுபடி.. 200எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. 5,000mAh பேட்டரி.. 66W சூப்பர்சார்ஜ்.. எந்த போன்?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் 90 ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஹானர் 90 ஸ்மார்ட்போன் இன்று முதல் முறை அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 90 போனை ரூ.37,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.39,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் அறிமுக சலுகையாக இன்று இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.5000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு 3000 தள்ளுபடியும் உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஹானர் போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 360Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) வருகிறது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
இந்த ஹானர் போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த 8 ஜிபி மாடலில் 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. அதோபோல 12 ஜிபி ரேம் மாடலில் 7 ஜிபி மெமரி வருகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போனில் 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி (மேக்ரோ ஆப்சன்) டெப்த் லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. மேலும் இதில் 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வருகிறது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
இந்த ஹானர் 90 போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) உடன் 2.5GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (2.5GHz Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக அட்டகாசமான அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹானர் மாடல்களில் வரும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) வருகிறது.

குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு இந்த மாடலில் 66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.
மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 கலர்களில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








