Home
Mobile

இன்பதிர்ச்சி கொடுத்த HONOR.. ஆண்ட்ராய்டு 15 அப்டேட்.. எந்த ஸ்மார்ட்போனுக்கு தெரியுமா?

இந்தியாவில் ஹானர் 90 (Honor 90) ஸ்மார்ட்போன்களுக்கு மேஜிக்ஓஎஸ் 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கிடைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் ஹானர் போனுக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும். இதுதவிர செக்யூரிட்டி அப்டேட்கள்(Security Updates) ஹானர் 90 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 90 ஸ்மார்ட்போனுக்கு மேஜிக்ஓஎஸ் 9.0 அப்டேட் கிடைப்பதால் ஏஐ போட்டோ எடிட்டர் (AI Photo Editor), ஏஐ டிரான்ஸ்லட் (AI Translate) உள்ளிட்ட பல்வேறு ஏஐ அம்சங்களைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த புதிய அப்டேட் ஹானர் 90 பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது ஹானர் 90 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இன்பதிர்ச்சி கொடுத்த HONOR.. ஆண்ட்ராய்டு 15 அப்டேட்.. எந்த மாடல்?

ஹானர் 90 அம்சங்கள் (Honor 90 specifications): 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி (மேக்ரோ ஆப்சன்) டெப்த் லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதில் 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வருகிறது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஹானர் 90 போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (2.5GHz Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட். அதேபோல கேமிங் பிரியர்களுக்காக அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது இந்த அசத்தலான ஹானர் 90 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்

5000mAh பேட்டரி வசதியுடன் இந்த அசத்தலான ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. அதேபோல் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 66 வாட்ஸ் சூப்பர்சார்ஜ் (SuperCharge) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்

மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். தற்போது அமேசான் தளத்தில் ரூ.37,999 விலையில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
HONOR 90 getting Android 15 update in India: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X