Home
Mobile

அமேசானில் வரப்போகிறது ஹானர் பொக்கிஷம்.. 200MP கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் செப்டம்பர் 21-ம் தேதி ஹானர் 90 எனும் போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் அமேசான்
தளத்தில் ஹானர் 90 போன் விற்பனைக்கு வரும் என்று ஹானர் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. தற்போது இந்த போன் அமேசான் தளத்தில் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் மூன்று வருடங்களுக்கு பிறகு ஹானர் நிறுவனம் மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு, தரமான சிப்செட், அட்டகாசமான கேமராக்கள் என பல சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவர இருக்கிறது ஹானர் 90.

அமேசானில் வரப்போகிறது ஹானர் பொக்கிஷம்.. எந்த மாடல்?

மேலும் ஏற்கனவே வெளியான ஹானர் 90 (Honor 90) போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். விரைவில் அறிமுகமாகும் ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+), ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3,840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

இந்த போனில் இருக்கும் டிம்மிங் ஃபிரிகொன்சி டெக்னாலஜியானது, போனின் ஸ்கிரீன் டிம்மிங், பிரைட்னஸ் லெவல், ஃப்ளிக்கரிங் (Flickering) மற்றும் பேக் லைட் ஆன்-ஆஃப் உள்ளிட்டவையால் கண்களுக்கு ஏற்படும் கோளாறுகளை தவிர்த்துவிடும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நம்பி வாங்கலாம்.

அதேபோல் டிஸ்பிளேவில் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்ட வைடு கலர் கமட் (Wide Color Gamut) கொடுக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் அட்ரனோ 644 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் ஸ்மார்ட்போன்.

MagicOS 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மிகவும் மெலிதான வடிவமைப்பைக் கொண்டுள்ளது ஹானர் 90 ஸ்மார்ட்போன்.

ஹானர் 90 பின்புறம் 200எம்பி பிரைமரி கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் லென்ஸ் ஆகிய மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது ஹானர் 90 போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

குறிப்பாக 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் 90 போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது.

அமேசானில் வரப்போகிறது ஹானர் பொக்கிஷம்.. எந்த மாடல்?

66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது ஹானர் 90 போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, 4ஜி, புளூடூத் 5.2, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

மிட்நைட் பிளாக் (Midnight Black), எம்ரால்டு கிரீன் (Emerald Green), டயமண்ட் சில்வர் (Diamond Silver) ஆகிய 3 கலர்களில் வெளிவரும் இந்த புதிய ஹானர் 90 போன். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்தியாவில் ரூ.35,000 பட்ஜெட்டில் ஹானர் 90 போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 90 confirmed to be available in Amazon India: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X