கண்களையே தூக்கிசாப்பிடும் டிஸ்பிளே! நேரில் பார்க்கும் பீல் கொடுக்கும் டெக்னாலஜி! உலகின் ஒரே மாடல்!
ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) போன்ற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களையே தூக்கி சாப்பிடும் வகையில், ஹானர் (HONOR) நிறுவனத்தின் ஹானர் 90 சீரிஸ் (HONOR 90 Series) போன்கள் 3,840Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ஒரு போனில் எச்டி (HD) தரத்தில் வீடியோக்களை பார்த்தால், அது நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், ஹானர் 90 சீரிஸ் மாடல்களான ஹானர் 90 (HONOR 90) மற்றும் ஹானர் 90 ப்ரோ (HONOR 90 Pro) போன்களின் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது.

குவாட் கர்வ்ட் டிசைன், ஃபுல்எச்டிபிளஸ், ஓஎல்இடி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் என்று ஒரு டிஸ்பிளேவுக்கான அனைத்து ஹை-எண்ட் அம்சங்களும் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன்கள் எப்போது வெளியாகும்? அவற்றின் மற்ற அம்சங்கள் என்ன? டிம்மிங் டிஸ்பிளேவால் என்ன பயன்? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.
ஹானர் 90 அம்சங்கள் (HONOR 90 Specification): இந்த ஹானர் போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ், குவாட் கர்வ்ட் (Quad Curved) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுவரையில் வெளியான எந்த போன்களிலும் கொடுக்கப்படாத அளவில், ஹானர் 90 மாடல்களில் 3,840Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் ஃபிரிகொன்சி (Frequency) வருகிறது.
சொல்லப்போனால், உலகளவில் 3,840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி டிஸ்பிளே கொண்ட ஒரே மாடலாக ஹானர் 90 இருக்கிறது. இந்த டிம்மிங் ஃபிரிகொன்சி மூலம் டிஸ்பிளே ஃப்ளிக்கரிங் (Flickering), டிம்மிங் ஸ்கிரீன், பிரைட்னல் லெவல், பேக் லைட் ஆன்-ஆஃப் உள்ளிட்டவையால் கண்களுக்கு துளியும் சிரமம் ஏற்படாது. அதுமட்டுமல்லாமல், ஒரு சாதாரண வீடியோ கூட இந்த டிஸ்பிளேவில் அதிக கலர்களுடன் மிகுந்த கிளாரிட்டியாக தெரியும்.
இதற்கேற்ப 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்ட வைடு கலர் கமட் (Wide Color Gamut) கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், நேரில் பார்ப்பது போன்ற வீடியோ அனுபவத்தை, இந்த டிஸ்பிளே கொடுக்கும். இந்த போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 1) சிப்செட் வருகிறது. 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் லென்ஸ் கொண்டுள்ளது.
32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்புள்ளது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. இந்த அம்சங்கள் மட்டும், இதுவரையில் வெளியாகி இருக்கின்றன. முழு அம்சங்கள் வெளியாகிவில்லை.
ஹானர் 90 ப்ரோ அம்சங்கள் (HONOR 90 Pro Specification): இந்த ப்ரோ போன், ஹானர் 90 மாடலில் உள்ள பெரும்பாலான அம்சங்களை கொண்டிக்கிறது. ஆனால், கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட்டில் சில மாற்றங்கள் வருகிறது. அந்த வகையில், 200 எம்பி மெயின் + 32 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் செல்பீ கேமரா 32 எம்பியாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், அது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், 2 செல்பீ கேமராக்களுடன் ஹானர் 90 ப்ரோ போன் வெளியாகும் என்பது அதன் போட்டோக்கள் மூலம் தெரியவருகிறது.
இந்த ஹானர் 90 ப்ரோ போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 2) சிப்செட் வர வாய்ப்புள்ளது. அதேபோல மேஜிக்ஓஎஸ் (MagicOS) கொடுக்கப்படலாம். இந்த ஹானர் 90 சீரிஸ் போன்கள் நாளை (ஜூலை 6) பாரிஸ் நகரில் அறிமுகம் செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








