6 ஜிபி ரேம் உடன் வெளிவரும் அட்டகாசமான ஹானர்9 பிரீமியம்.!
கடந்த மாதம் ஹவாய் நிறுவனம் ஹானர்9 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, மேலும் மூன்று நினைவக வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.
கடந்த மாதம் ஹவாய் நிறுவனம் ஹானர்9 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, மேலும் மூன்று நினைவக வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.
தற்போது அறிமுகப்படுத்தப்படும் ஹானர்9 பிரீமியம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி திறமைகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் சினாவில் உள்ள மொபைல் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஆக்டோ-கோர்;
ஹானர்9 பிரீமியம் பொதுவாக ஆக்டோ-கோர் கீரின் 960 செயிலி கொண்டுள்ளதாக உள்ளது, மேலும் இயக்கத்திறக்கு மிக அருமையகா இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்

ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ள ரியர் கேமரா பொறுத்தவரை 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, அதன்பின் முன்புற கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.0:
ஹானர்9 பிரீமியம் ரியர் கேமரா 4கே வீடியோ பதிவுடன் வெளிவருகிறது எனக் கூறப்படுகிறது. மேலும் ஆண்டராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்டபோன் இயங்கும் எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
ப்ளூடூத், வைபை, என்எப்சி, ஏ-ஜிபிஎஸ், வோல்ட், யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில்இடம்பெற்றுள்ளது.

3200எம்ஏஎச்:
இந்த ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications