Home
Mobile

வெறும் ரூ.10,999/-க்கு ஹானர் 9 லைட், இந்தியாவில் அறிமுகம்.!

இதன் முதல் ப்ளாஷ் விற்பனையானது வருகிற ஜனவரி 21-ஆம் தேதி 12 மணிக்கும் (நள்ளிரவு), அடுத்த நாள் 12 மணிக்கும் (நண்பகல்) நிகழும்.

By Muthuraj

புது தில்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானரின் இரண்டாவது க்வாட்-கேமரா ஸ்மார்ட்போன் ஆன ஹானர் 9 லைட் அறிமுகம் செய்யப்பட்டது.

வெறும் ரூ.10,999/-க்கு ஹானர் 9 லைட், இந்தியாவில் அறிமுகம்.!

வருகிற ஜனவரி 21-ஆம் தேதி முதல் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட் வழியாக, ஹானர் 9 லைட் விற்பனை செய்யப்படும். இக்கருவியின் பிராதன விற்பனை புள்ளியாக அதன் முன் மற்றும் பின்புலத்தில் அமைக்கப்பெற்றுள்ள இரட்டை கேமரா அமைப்புகள் திகழுமென்பதில் சந்தேகமேயில்லை. நிறுவனத்தின் சமீபத்திய இஎம்யூஐ 8.0 கொண்டு இயங்கும் இக்கருவியின் விலை நிர்ணயம் மற்றும் இதர அம்சங்களை பற்றி விரிவாக காண்போம்.

இரண்டு சேமிப்பு வகை

இரண்டு சேமிப்பு வகை

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் மொத்தம் இரண்டு சேமிப்பு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதென்பதும், அடுத்தபடியாக இந்தியாவில் தான் அறிமுகமாகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.

4ஜிபி/ 64ஜிபி

4ஜிபி/ 64ஜிபி

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி சேமிப்பு மாறுபாடானது ரூ.10,999/-க்கும், 4ஜிபி/ 64ஜிபி மறுபாடானது ரூ.14.999/-க்கும் ப்ளிப்கார்ட் மற்றும் ஹானர் இந்தியா ஸ்டோர்களில் பிரத்தியேகமாக விற்பனையாகு

ஜனவரி 21-ஆம் தேதி 12 மணிக்கு

ஜனவரி 21-ஆம் தேதி 12 மணிக்கு

இதன் முதல் ப்ளாஷ் விற்பனையானது வருகிற ஜனவரி 21-ஆம் தேதி 12 மணிக்கும் (நள்ளிரவு), அடுத்த நாள் 12 மணிக்கும் (நண்பகல்) நிகழும். இந்த விற்பனையை தொடர்ந்து, ஜனவரி 22 மற்றும் ஜனவரி 23 ஆகிய தேதிகளிலும் 12 மணி அளவில் (நண்பகல்) நடைபெறும். சலுகைகளை பொறுத்தமட்டில், சிட்டி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

வண்ண மாறுபாடு

வண்ண மாறுபாடு

சீனாவில் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் 4ஜிபி/ 32ஜிபி மாறுபாடு வெளியானதும், அந்த மாறுபாடு இந்தியாவில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு சேமிப்பு மாறுபாடுகளும் சப்பையர் ப்ளூ, மிட்நைட் பிளாக் மற்றும் க்லேஷியல் க்ரே ஆகிய வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

அம்சங்களை பொறுத்தமட்டில், ஹானர் 9 லைட் ஒரு இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது நிறுவனத்தின் சமீபத்திய இஎம்யூஐ 8.0 கொண்டு (ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான) இயங்குகிறது. ஒரு 5.65 அங்குல முழு எச்டி + (1080x2160 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1(8: 9 விகிதம் மற்றும் 428பிபிஐ பிக்சல் அடர்த்தி) கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

அக்வா-கோர் ஹூவாய் ஹைசிலிகான் கிரின் 659 எஸ்ஓசி உடனான 3ஜிபி அல்லது 4ஜிபி ரேம் கொண்டு இயங்கும் ஹானர் 9 லைட் ஆனது நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. இரண்டு இரட்டை கேமரா அமைப்புகளும் ஒரு 2 மெகாபிக்சல் இரண்டாம் கேமரா கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ளது. ரியர் கேமரா மட்டும் பிடிஏஎப் ஆட்டோபோகஸ் மற்றும் எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது.

கலப்பின இரட்டை சிம்

கலப்பின இரட்டை சிம்

உள்ளடக்க சேமிப்பை பொருத்தமட்டில் ஹானர் 9 லைட் ஆனது இரண்டு சேமிப்பு விருப்பங்களின் கீழ் வருகிறது - 32 ஜிபி மற்றும் 64 ஜிபி. இவை இரண்டுமே கலப்பின இரட்டை சிம் உள்ளமைவில் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவை வழங்குகின்றன.

4ஜி வோல்ட்

4ஜி வோல்ட்

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இந்த ​​ஸ்மார்ட்போன் ப்ளூடூத், வைஃபை, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், ஓடிஜி ஆதரவுடனான மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. உடன் அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்நட்டோமீட்டர் (டிஜிட்டல் திசைகாட்டி) மற்றும் பராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்டுள்ளது

பேட்டரி

பேட்டரி

ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் ஹானர் 9 லைட் ஆனது 3ஜி சேவையின் கீழ் 20 மணி நேரம் வரையிலான பேச்சு நேரம் மற்றும் 24 நாட்கள் வரையிலான காத்திருப்பு நேரத்தை வழங்குமென நிறுவனம் கூறுகிறது. உடன் இந்த ஹேண்ட்செட் கிட்டத்தட்ட 2 மணி நேரம் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகுமென்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பரிமாணங்களின் அடிப்படையில், ஹானர் 9 லைட் ஆனது 151x71.9x7.6 மிமீ மற்றும் 149 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 9 Lite With Quad Cameras Launched in India: Price, Specifications, Features. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X