ஹானர் 7எக்ஸ்-ஐ விட மலிவான விலை, கூடுதல் அம்சங்களுடன் ஹானர் லைட் 9.!

டிசம்பர் 26-ஆம் தேதியன்று சீனாவில் விற்பனைக்கு வருகிறது மற்றும் இந்தியா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து உட்பட 14 நாடுகளில் ஹானர் 9 லைட் விரைவில் விற்பனையாகும்

|

சீன நிறுவனமான ஹூவாய் பிராண்ட் அதன் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனை நேற்று (வியாழன்) சீனாவில் அறிமுகப்படுத்தியது.

ஹானர் 7எக்ஸ்-ஐ விட மலிவான விலை, கூடுதல் அம்சங்களுடன் ஹானர் லைட் 9.!

இந்த ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில், 5.65 அங்குல, 18: 9 என்கிற திரை விகிதத்திலான ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதன் முன் மற்றும் பின்புறங்களில் இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான இஎம்யூஐ 8.0 கொண்டு இயங்குகிறது.

ஹானர் 7எக்ஸ்-ஐ விட மலிவான விலை, கூடுதல் அம்சங்களுடன் ஹானர் லைட் 9.!

இக்கருவி வருகிற டிசம்பர் 26-ஆம் தேதியன்று சீனாவில் விற்பனைக்கு வருகிறது மற்றும் இந்தியா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து உட்பட 14 நாடுகளில் ஹானர் 9 லைட் விரைவில் விற்பனையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பானது தோராயமாக ரூ,11,700/-க்கும், இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது சுமார் ரூ.15,600/-க்கும் மற்றும் இறுதி மாறுபாடான 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பானது சுமார் ரூ.17,500/-க்கும் விற்பனையாகலாம்.

முன்பதிவு

முன்பதிவு

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஸ்மார்ட்போன் சீனாவில்டி வருகிற டிசம்பர் 26 (காலை 10:08 மணிக்கு சிஎஸ்டி) விற்பனைக்கு வரும், மற்றும் இந்த முதல் விற்பனைக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (இன்று) திறக்கப்படும். இந்த விற்பனையை தொடர்ந்து, விரைவில் இதன் இந்திய விற்பனை அறிவிக்கப்படும்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஹானர் 9 லைட் ஆனது, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான எம்ஐயூஐ 8.0 கொண்டு இயங்குகிறது. இது ஒரு 5.65 அங்குல முழு எச்டி + (1080x2160 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.

ரேம்

ரேம்

ஹூவாய் ஹைசிலிகான் கிரின் 659 எஸ்ஓசி (நான்கு கோர்கள் 2.36ஜிகாஹெர்ட்ஸ், மற்றும் நான்கு கோர்கள் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) மூலம் இயக்கப்படுகிறது. இக்கருவி 3 ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மாறுபாடுகளில் கிடைக்கிறது.

4 கேமராக்கள்

4 கேமராக்கள்

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஹானர் 9 லைட் அதன் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஆகிய இரண்டிலுமே ஒரு 2 மெகாபிக்சல் இரண்டாம் கேமரா கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை கேமராக்களை கொண்டுள்ளது. அதன் பின்புற கேமராவில் கூடுதலாக எல்இடி ஃப்ளாஷ் பிடிஏஎப் ஆட்டோஃபோகஸ் ஆகிய அம்சங்கள் உள்ளன

உள்ளடக்க சேமிப்பு

உள்ளடக்க சேமிப்பு

ஹானர் 9 லைட் ஆனது 32 ஜிபி அல்லது 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ளது. உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் வழங்குகின்றது. 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மற்றும் மைக்ரோ- யூஎஸ்பி ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

சென்சார்

சென்சார்

சென்சார்களை பொறுத்தமட்டில், அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னோமீட்டர் (டிஜிட்டல் திசைகாட்டி) மற்றும் பராக்சிமிட்டி ஆகிய சென்சார்களை தன்னுள் கொண்டுள்ளது. ஒப்பிடுகையில், இதன் முன்னோடியான ஹானர் 9 ஆனது ஒரு 16: 9 காட்சி மற்றும் இரட்டை பின்புற கேமராக்களையே கொண்டிருந்தாலும் கூட ஒரு சக்தி வாய்ந்த செயலியை உட்பொதிருந்தது.

பேட்டரி

பேட்டரி

3ஜி-யில் 20 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 24 மணி நேரம் வரை காத்திருப்பு நேரத்தை வழங்கும் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஹானர் 9 லைட் இயக்கப்படுகிறது. நிறுவனத்தின்படி, இதன் பேட்டரி 2 மணி நேரம் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். அளவீட்டில், இது 151x71.9x7.6 மிமீ மற்றும் 149 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 9 Lite With 18:9 Display, Four Cameras Launched: Price, Specifications. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X