Home
Mobile

ரூ.19,410/-க்கு 4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் (அ) யூத் எடிஷன்.!

கூறப்படும் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் சார்ந்த சுவாரசியமான விவரங்கள் கசியவிடப்பட்டுள்ளன.

By Muthuraj

வருகிற டிசம்பர் 21-ஆம் தேதியன்று சீனாவில் நடைபெறும் ஒரு நிகழ்வில் ஹானர் நிறுவனம் அதன் புத்தம்புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம்செய்ய திட்டமிட்டுள்ளது. அன்று ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இக்கருவி ஹானர் 9 யூத் பதிப்பு என்ற பெயரின்கீழும் அறிமுகப்படுத்தப்படலாம்.

ரூ.19,410/-க்கு 4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் (அ) யூத் எடிஷன்.!

வெளியீட்டு நிகழ்வு நெருங்கி வரும் இத்தருணத்தில், ஆண்ட்ராய்டு கிரன்ச் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கையில், கூறப்படும் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் சார்ந்த சுவாரசியமான விவரங்கள் கசியவிடப்பட்டுள்ளன.

4ஜிபி ரேம் + 32 ஜிபிமாதிரி

4ஜிபி ரேம் + 32 ஜிபிமாதிரி

சீனா டெலிகாம் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் சேமிப்பு மாதிரிகளை பொறுத்தமட்டில், இக்கருவி 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட 4 ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படும். இந்த 4ஜிபி ரேம் மாதிரியானது சுமார் ரூ.19,410/- என்கிற விலைப்புள்ளியை எட்டலாம்

4ஜிபி ரேம் + 64 ஜிபிமாதிரி

4ஜிபி ரேம் + 64 ஜிபிமாதிரி

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் மற்றொரு மாதிரியான 64 ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறன் கொண்ட 4 ஜிபி ரேம் ஆனது சுமார் ரூ.23,291/- என்கிற விலைப்புள்ளியை எட்டலாமென்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முழு திரை டிஸ்ப்ளே

முழு திரை டிஸ்ப்ளே

சீனாவின் தரசான்றிதழ் வலைத்தளமான டிஇஎன்ஏஏ-வில் காணப்பட்ட ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் ஆனது 2160 x 1080 பிக்சல்கள் என்கிற அளவிலான தீர்மானம் கொண்ட ஒரு 5.65 அங்குல முழு திரை டிஸ்ப்ளே மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டிருக்கிறது.

ஹீலியோ கிரின் 659 சிப்செட்

ஹீலியோ கிரின் 659 சிப்செட்

ஹீலியோ கிரின் 659 சிப்செட் மூலம் இயக்கப்படும் இக்கருவி (முன்னர் கூறியபடி) 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு உடனான 4 ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியென இரண்டு வகைகளில் வெளிவருகிறது.

13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல்

13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல்

கேமரா துறையை பொறுத்தமட்டில், ஹானர் 9 லைட் ஆனது மொத்தம் 4 கேமிராக்களை கொண்டுவரலாமென டிஇஎன்ஏஏ வலைத்தளம் பட்டியலிட்டுள்ளது. அதாவது முன் மற்றும் பின் பக்கங்கள் முறையே 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்புகளை பெறும்.

2900எம்ஏஎச் பேட்டரி

2900எம்ஏஎச் பேட்டரி

இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஹானர் 9 லைட் ஆனது ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கீழ் இயங்குகிறது மற்றும் 2900எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், 4ஜி -எல்டிஇ, வோல்ட், ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

வண்ண விருப்பங்கள்

வண்ண விருப்பங்கள்

அளவீட்டில் (அதாவது பரிமாணங்களில்) 151 x 71.9 x 7.6 மிமீ மற்றும் 149 கிராம் எடையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சாம்பல் ஆகிய வண்ண விருப்பங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. பட்டியலின்படி, இக்கருவி கிராவிட்டி சென்சார், டிஸ்டன்ஸ், லைட் சென்சார் ஆகியவைகளை உட்கொண்டிருக்கும்.

Best Mobiles in India

English summary
Honor 9 Lite pricing leaked ahead of the launch. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X