Subscribe to Gizbot

ரூ.10,999/-க்கு டூயல் ரியர் + டூயல் செல்பீ கேமராக்கள்; வேறென்னே வேண்டும்.!

Written By:

கடந்த சில ஆண்டுகளில் ஹூவாய் சில அற்புதமான கேமரா ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளது. அதன் துணை நிறுவனமான ஹானர் ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் சிறப்பான மேல் புகைப்பட அனுபவத்தை அதிகரிக்க்கும் நோக்கத்தில் இரட்டை லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது.

ரூ.10,999/-க்கு டூயல் ரியர் + டூயல் செல்பீ கேமராக்கள்.!

ஹானர் நிறுவனத்தின் இரட்டை லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன்களின் வரிசையில் களமிறங்கியுள்ள சமீபத்திய கருவியான ஹானர் 9 லைட் ஆனது மற்றொரு உயர்தர தொழில்நுட்பத்திற்கான தெளிவான எடுத்துக்காட்டாகும். ரூ.10,999/- (3 ஜிபி மாறுபாடு) என்கிற பட்ஜெட் விலை பிரிவின்கீழ் ஒரு க்வாட்-லென்ஸ் கேமரா அமைப்பை ஹானர் 9 லைட் உடன் ஒருங்கிணைப்பதன் மூலம் ஹானர் இதை சாத்தியப்படுத்தியுள்ளது.

முன் மற்றும் பின்புற பக்கங்களில் 13எம்பி + 2எம்பி என்கிற இரட்டை லென்ஸ் கேமரா அமைப்புகளை கொண்டுள்ள ஹானர் 9 லைட் ஆனது, ஏன் சந்தையில் கிடைக்கும் மிகச்சிறந்த கேமரா ஸ்மார்ட்போன் என போற்றப்படுகிறதென்பதை விரிவாக காணோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவின்கீழ் களமிறங்கியுள்ள இக்கருவி, பொக்கே விளைவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட நான்கு லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதை சந்தையில் வேறு எந்த சாதனமும் வழங்கவில்லை. முன்னர் குறிப்பிட்டபடி, ஹானர் 9 லைட் அதன் முன் மற்றும் பின்புறத்தில் 13எம்பி + 2எம்பி கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன் மற்றும் பின்புறம் உள்ள 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ் ஆனது நீங்கள் கைப்பற்றும் படங்களின் ஆழத்தினை உறுதி செய்யும்.

பரந்த அபெர்ஷர் முறை

பரந்த அபெர்ஷர் முறை

இதன் பின்புற கேமராவானது 'பேஸ் டிடெக்ஷன் ஆட்டோபோகஸ்' மற்றும் 'பொக்கே எபெக்ட்' ஆகியவைகளை உருவாக்கும் மேம்பட்ட பரந்த அபெர்ஷர் முறையை ஆதரிக்கிறது. இதன் முன்பக்க 13எம்பி செல்பீ கேமராவானது நிலையான போகஸ் கொண்டுள்ளதால் பிரமாண்டமான முடிவுகளை வழங்குகிறது. ரூ.13,999/-க்கு கிடைக்கும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் ஒற்றை செல்பீ கேமராவானது பொக்கே விளைவுகளை வழங்காது.

கேமரா யூஐ மற்றும் அம்சங்கள்

கேமரா யூஐ மற்றும் அம்சங்கள்

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களுதன் நீங்கள் போராட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அந்த அளவிலான பயனர் இடைமுகத்தை இக்கருவி கொண்டுள்ளது. பலவகையான மோட்ஸ், பில்டர்ஸ் மற்றும் அம்சங்களை கொண்டிருப்பதால், ஒவ்வொரு முறையும் வித்தியாசமான புகைப்படத்தை கைப்பற்ற ஹானர் 9 லைட் உதவும். ஹானர் 9 லைட் ஆனது அதன் கேமராவின் பிரதான திரையிலேயே போர்ட்ரியட், வைட் அபெர்ஷர், மூவிங் பிக்சர்ஸ், பியூட்டி மோட் உட்பட பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

ஒரு ஸ்வைப் செய்தால் போதும்

ஒரு ஸ்வைப் செய்தால் போதும்

கேமராவில் ரெசல்யூஷன், ஜிபிஎஸ், டைமர், டச் டூ கேப்சர் மற்றும் பல கேமரா அமைப்புகளையும் அணுக வெறுமனே 0வலதுபுறம் ஸ்வைப் செய்தால் போதும். அங்கு நீங்கள் கைப்பற்ற விரும்பும் படங்களுக்கான புதிய முறைமைகளை தேர்வு செய்யலாம். அதாவது போட்டோ, ப்ரோ போட்டோ (கையேடு முறை), வீடியோ, ப்ரோ வீடியோ, எச்டிஆர், நைட் ஷாட், பனோரமா, லைட் பெயின்டிங், டைம் லேப்ஸ், பில்டர்ஸ், வாட்டர்மார்க் மற்றும் மோர் ஆகிய விருப்பங்கள் அணுக கிடைக்கும். செல்பீ கேமாராவை பொறுத்தமட்டில் பனோரமா செல்பீயானது க்ரூப் செல்பீ எடுக்க உதவும் மற்றும் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் கேமாராவானது சென்ஸ் கெஸ்டர்ஸ் மற்றும் ஸ்மைல் போன்றவைகளை உணரும் வண்ணம் அறிவார்ந்தவைகளாகும். மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் இந்த அளவிலான கேமரா அம்சங்கள் கிடையாது.

கேமரா செயல்திறன்

கேமரா செயல்திறன்

இதன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார் ஆகியவற்றின் கலவையானது ஆழமான-உணர்திறன் மற்றும் பொக்கே காட்சிகளின் நன்மைகளை பதிவு செய்ய உதவுகிறது. இதன் விளைவாக உங்களின் புகைப்படங்கள் வெறும் ஆவணங்களாக மட்டுமின்றி நிஜ வாழ்க்கை சூழலை பிரதிபலிக்கும். குறிப்பாக இதன் முன் மற்றும் பின்புறத்தில் உள்ள 2எம்பி இரண்டாம் சென்சார் ஆனது தகவல் துறையில் ஆழமான விடயங்களை பதிவு செய்கிறது. மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் 13எம்பி சென்சார் உருவாக்கப்பட்ட பெக்கெ விளைவை விட இது மிகவும் மதிக்கத்தக்கதாக உள்ளது.

பட்ஜெட் விலையில் போர்ட்ரியட் மோட்

பட்ஜெட் விலையில் போர்ட்ரியட் மோட்

போர்ட்ரியட் புகைப்படங்களை எடுக்க ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பியூட்டி அல்காரிதம் துணைபுரிகிறது. இது முகங்கள், மாறுபட்ட அம்சங்களை அடையாளம் காணக்கூடியது மற்றும் பொருள் சார்ந்த பாலினங்களின் அடிப்படையில் பியூட்டி விளைவுகளை தனிப்பயனாக்கம் செய்யவும் உதவுகிறது. சியோமி மி ஏ1, மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஆகிய கருவிகளுடன் ஒப்பிடும் போது ஹானர் 9 லைட் மிகவும் மலிவான விலையில் இதை வழங்குகிறது. இந்த விலையில் வேறு எந்தவொரு கைபேசியிலும் நீங்கள் அர்ப்பணிக்கப்பட்ட போர்ட்ரியட் பயன்முறையை அடைய முடியாது.

போதுமான விவரம் மற்றும் இயற்கை வண்ணங்கள்

போதுமான விவரம் மற்றும் இயற்கை வண்ணங்கள்

இதன் முன் மற்றும் பின்புற கேமராக்கள் நல்ல விவரங்கள் மற்றும் மாறுபடும் விகிதத்துடன் படங்களை வழங்குகின்றன. மேலும் பதிவான படங்கள் இயற்கையான வண்ணங்களில் பதிவாவதை காணார் 9 லைட் உறுதி செய்கிறது. மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமரா வெளியீடுகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பான முடிவுகளை இது வழங்குகிறது. எப்/ 0.95 முதல் எப்/ 13 வரையிலாக அபெர்ஷர் மதிப்புகளை சரிசெய்யலாம் என்பதும், நல்ல அல்லது மோசமான லைட்டிங் நிலையிலும் கூட எந்தவிதமான ஷட்டர் தாமதங்களையும் அனுபவிக்க மாட்டீர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முடிவு

முடிவு

மறுகையில் உள்ள மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் சில சிக்கல்கள் உள்ளன. அதில் ஷட்டர் லேக்தனை அனுபவிப்பீர்கள். மேலும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் கொண்டு பொக்கே படங்களை கைப்பற்றும் போது நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். ஹானர் 9 லைட் ஆனது ஒரு பாக்கெட் நட்பு விலை புள்ளியில் அகிடைக்கும் திறன்மிக்க கேமரா செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் இரட்டை-லென்ஸ் கேமரா அமைப்புகள் மாறுபட்ட ஒளி நிலைமைகள் மற்றும் நிஜ வாழ்க்கை சூழல்களில் சிறந்த பதிவை ழங்குகின்றன. மறுகையில் உள்ள மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் டூயல் லென்ஸ் கேமரா அமைப்பானது ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் செயல்திறனுடன் போட்டியிடத் தவறுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Honor 9 Lite offers the most feature packed camera in its price point. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot