ரூ.10,999/-க்கு இதைவிட வேறென்ன வேணும்.? மார்க்கெட்டின் சிறந்த டூயல் கேம் ஸ்மார்ட்போன்.!

By Prakash
|

ஹூவாய் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்டுத்தியது, அதன்பின்பு அதிவேக ஆண்ட்ராய்டு சாதனமாக உள்ளது இந்த ஹானர் வியூ 10 மாடல். மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனில் சிறந்த டூயல் லென்ஸ் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.

ரூ.10,999/-க்கு இதைவிட வேறென்ன வேணும்.?

அதேபோன்று ஹூவாய் நிறவனம் ரூ.10,999 விலையில் அட்டகாசமான ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது,மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் குறைந்த விலையில் பல்வேறு அம்சங்கள் கொண்டு வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஹானர் 9 லைட் வடிவமைப்புத் துறை:

ஹானர் 9 லைட் வடிவமைப்புத் துறை:

ஹானர் 9 லைட் வடிவமைப்புத் துறை பொறுத்தவரை வழக்கமான பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் போன்றவற்றை பயன்படுத்தவில்லை மாறாகஇ ஹானர் 9 லைட் பின்னால் ஒரு பளபளப்பான கண்ணாடி இடம்பெற்றுள்ளது, இது சிறந்த தொழில்நுட்பம் கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபீரியன் ப்ளூ, மிட்நைட் பிளாக் மற்றும் கிளாசியர் சாம்பல் போன்ற நிறங்களை அதிகரிக்கிறது இந்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் மாடல் 16:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது. ஹானர் 9 லைட்
ஸ்மார்ட்போன் மாடல் பெஸல்லெஸ் வடிவமைப்பு மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு:

இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு:

ஹூவாய் நிறவனம் எப்போதும் புகைப்படம் எடுப்பதில் பெரிய கவனம் செலுத்தியுள்ளதுடன் பல திறன் கொண்ட இரட்டை லென்ஸ் கேமரா கைபேசிகளை வழங்கியுள்ளது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஹானர் 9 லைட் அதன் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஆகிய இரண்டிலுமே ஒரு 2 மெகாபிக்சல் இரண்டாம் கேமரா கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை கேமராக்களை கொண்டுள்ளது. அதன் பின்புற கேமராவில் கூடுதலாக எல்இடி ஃப்ளாஷ் பிடிஏஎப் ஆட்டோஃபோகஸ் ஆகிய அம்சங்கள் உள்ளன.

மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 13,999-ஆக உள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனை விட
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மாடல்.

சிறந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு தகுந்த லென்ஸ் அமைப்புகள் கொண்டுள்ளது இந்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன். மேலும் அருமையான செல்பீ புகைப்படங்கள் மற்றும் பயனங்களின் போது எடுக்கும் புகைப்படங்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனில் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 1080 பிக்சல் தீர்மானம்:

1080 பிக்சல் தீர்மானம்:

ஹானர் 9 லைட் -ஆனது 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2,160x1,080 பிக்சல் தீர்மானம்
மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.5-இன்ச்
டிஸ்பிளே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9 லைட் ஒட்டுமொத்த மல்டிமீடியா வசதிகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்
வீடியோ கேம், இணையம், வீடியோ போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16:9 என்ற
திரைவிகிதம் மட்டும் இந்த மோட்டோ ஜி 5 எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

விலை நிர்ணயம்:

விலை நிர்ணயம்:

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இந்த ​​ஸ்மார்ட்போன் ப்ளூடூத், வைஃபை, 4ஜி வோல்ட்ஜி, பிஎஸ்/ எ-ஜிபிஎஸ், ஓடிஜி ஆதரவுடனான மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. உடன் அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்நட்டோமீட்டர் (டிஜிட்டல் திசைகாட்டி) மற்றும் பராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்டுள்ளது. மேலும் குவாட் லென்ஸ் கேமரா அமைப்பு போன்ற அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ. 10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor 9 Lite is a total value for money deal for millennials; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X