புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஹானர் 9 லைட்.!

By Prakash
|
How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

சீன நிறுவனமான ஹூவாய் பிராண்ட் அதன் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனை சாம்பல் நிறத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு இந்த புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மாடலை பிப்ரவரி 6-ம் தேதி விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஹானர் 9 லைட்.!

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே மிட்நைட் பிளாக் மற்றும் சபீயர் ப்ளூ நிறங்களில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் தற்சமயம் சாம்பல் நிறத்தில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே :

டிஸ்பிளே :

இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஹானர் 9 லைட் ஆனது, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான எம்ஐயூஐ 8.0 கொண்டு இயங்குகிறது. இது ஒரு 5.65 அங்குல முழு எச்டி + (1080x2160 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.

ரேம் :

ரேம் :

ஹூவாய் ஹைசிலிகான் கிரின் 659 எஸ்ஓசி (நான்கு கோர்கள் 2.36ஜிகாஹெர்ட்ஸ், மற்றும் நான்கு கோர்கள் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) மூலம் இயக்கப்படுகிறது. இக்கருவி 3 ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மாறுபாடுகளில் கிடைக்கிறது.

 4 கேமராக்கள் :

4 கேமராக்கள் :

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஹானர் 9 லைட் அதன் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஆகிய இரண்டிலுமே ஒரு 2 மெகாபிக்சல் இரண்டாம் கேமரா கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை கேமராக்களை கொண்டுள்ளது. அதன் பின்புற கேமராவில் கூடுதலாக எல்இடி ஃப்ளாஷ் பிடிஏஎப் ஆட்டோஃபோகஸ் ஆகிய அம்சங்கள் உள்ளன.

சென்சார் :

சென்சார் :

சென்சார்களை பொறுத்தமட்டில், அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னோமீட்டர் (டிஜிட்டல் திசைகாட்டி) மற்றும் பராக்சிமிட்டி ஆகிய சென்சார்களை தன்னுள் கொண்டுள்ளது. ஒப்பிடுகையில், இதன் முன்னோடியான ஹானர் 9 ஆனது ஒரு 16: 9 காட்சி மற்றும் இரட்டை பின்புற கேமராக்களையே கொண்டிருந்தாலும் கூட ஒரு சக்தி வாய்ந்த செயலியை உட்பொதிருந்தது.

பேட்டரி :

பேட்டரி :

3ஜி-யில் 20 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 24 மணி நேரம் வரை காத்திருப்பு நேரத்தை வழங்கும் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஹானர் 9 லைட் இயக்கப்படுகிறது. நிறுவனத்தின்படி, இதன் பேட்டரி 2 மணி நேரம் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். அளவீட்டில், இது 151x71.9x7.6 மிமீ மற்றும் 149 கிராம் எடையும் கொண்டுள்ளது.

விலை :

விலை :

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பானது தோராயமாக ரூ,10,999/-க்கும், இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது சுமார் ரூ.14,999/-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor 9 Lite Grey Colour Variant Announced Goes on Sale Next Tuesday via Flipkart ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X