டூயல் கேம் உடன் ஹானர் 9 ஜூன் 12 அன்று எதிர்பார்க்கப்படுகிறது.!
வெளியான தகவல் வெளியீட்டுத் தேதியை மட்டும் குறிப்பிடாமல் ஹானர் 9 ஸ்மார்ட்போனில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு முன்னிலையில் உள்ளது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஹூவாய் வர்த்தக நிறுவனத்தின் ஹானர் 9 என்ற நிறுவனத்தின் முன்னணி கருவி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிமுகம் செய்யப்படவில்லை. இப்போது, வெளியாகியுள்ள புதிய ஆன்லைன் லீக்ஸ் செய்தியானது ஹூவாய் நிறுவனம்வரும் ஜூன் 12-ஆம் தேதியன்று அதன் ஹானர் 9 ஸ்மார்ட்போனை இறுதியாக அறிமுகப்படுத்தக்கூடும் என்று கூறுகிறது.

ஹானர் 9 நிகழ்வுக்கான டீஸர் படம், பிளேபுல்ட்ராய்டு (PlayfulDroid) மூலம் பெறப்பட்டுள்ளது. வெளியான தகவல் வெளியீட்டுத் தேதியை மட்டும் குறிப்பிடாமல் ஹானர் 9 ஸ்மார்ட்போனில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு முன்னிலையில் உள்ளது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
முன்னர் வெளியான லீக்ஸ் தகவலை போலல்லாமல், இது ஒரு சுவாரஸ்யமான சொற்றொடரைப் பயன்படுத்துவதைப் போலன்றி, இந்த புதிய அழைப்பிதழ் டீஸர் மிகவும் எளிமையாக ஸ்மார்ட்போன் பெயரைக் குறிக்க எண் 9-ஐ மட்டுமே காட்டுகிறது உடன் அதனோடு இரட்டை கேமராவையும் பிரதிபலிக்கும் வண்ணம் டிசைன் கொண்டுள்ளது.
ஹானர் 9 கருவியல் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாக ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 20 மெகாபிக்சல் +12 மெகாபிக்சல் சென்சார் இருக்கலாம். மேலும் தொலைபேசி ஒரு ஹிசிலிகான் கிரீன் 960 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் கொண்டிருக்கலாம்.
காட்சி அடிப்படையில், ஹூவாய் ஹானர் 9 அதன் முன்னோடி போல ஒரு 5.2-அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும், வரவிருக்கும் ஹானர் தொலைபேசி இஎம்யூஐ ஸ்கின் கொண்டு பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த புகைப்படம் ஒரு பத்திரிகை அழைப்பின் லீக்ஸ் என்பதால், இது கூறும் விவரக்குறிப்புகளை நாம் அவ்வாறே எடுத்துக்கொள்ள கூடாது. ஹானர் 9 சார்ந்த அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி ஆகிய நிஜமான விவரங்கள்கை அறிய நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக நாம் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications