மூன்று வெவ்வேறு நினைவக மாறுபாடுகளில் வெளிவரும் ஹானர் 9 ஸ்மார்ட்போன்.!
ஹவாய் ஹானர் 9 : 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி.!
ஹானர்9 பொருத்தமாட்டில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மூன்று வெவ்வேறு நினைவக மாறுபாடுகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹவாய் ஹானர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஹவாய் ஹானர் 9 பல்வேறு விபரங்கள் மற்றும் தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. மேலும் இவை மொபைல் சந்தையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஹவாய் ஹானர் 9 பொருத்தவரை ஆக்டோகோர் 960சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இயங்குகிறது. இதன் பேட்டரி பொருத்தமாட்டில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி.
ஹவாய் ஹானர் 9 மூன்று வெவ்வேறு நினைவக மாறுபாடுகளில் வெளிவருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. முதலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி, இரண்டாவதாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி, மூன்றவதாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் வெளிவருதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் இதற்க்கு தகுந்தபடி இதன் விலைமதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் 4.0 ஜிபிஎஸ்,யுஎஸ்பி, வோல்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications