16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் ஹானர் 8எக்ஸ் சாதனம் அறிமுகம்.!

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.2ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் கிரிண் 710 செயலியைக் கொண்டு வெளிவரும்.

|

இந்திய மொபைல் சந்தையில் டூயல் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் சியோமி, ஓப்போ, விவோ போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், அந்நிறுவனங்களுக்கு போட்டியாக ஹானர் நிறுவனம் புதிய ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பைக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலைப் பொறுத்தவரை 14,999-ஆக உள்ளது. மேலும் சிறந்த மல்டிமீடியா அனுபவத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 16.51செ.மீ எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஐபோனில் இடம்பெற்றுள்ள நாட்ச் அமைப்பை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் 3750எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதால் அதிக நேரம் வரை இன்டர்நெட் பயன்படுத்த முடியும்.

நாட்ச் டிஸ்பிளே:

நாட்ச் டிஸ்பிளே:

16.51செ.மீ கொண்ட ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக ஐபோனில் உள்ள நாட்ச் அமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
வீடியோ மற்றும் கேமிங் போன்ற அனுபவங்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்டபோன் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்பதால் இந்திய சந்தையில் அதிக வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தரம் கொண்ட வன்பொருள் உதவியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 'Chip-on-film' (COF) என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்படி இந்த தொழில்நுட்பம் பயனர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தரும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தொழில்நுட்பம் என்னவென்றால ஸ்மார்ட்போனில் ஒரு விளிம்பில் இருந்து மற்றொரு விளிம்பில் பாணியில் வீடியோக்களை மற்றும் அனுபவத்தை விளையாட்டு ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக சிறந்த பாதுகாப்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயனர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 85% பரந்த வண்ண வரம்பு கொண்டிருக்கிறது. பின்பு எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை ஆதரிப்பதால் வீடியோ மற்றும் கேமிங் போன்ற அனுபவங்களுக்கு மிக அருமையாக இருக்கும். அதன்படி முதன்மை
முதன்மை மல்டிமீடியா சாதனமாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்டி வீடியோக்களை பார்ப்பதற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 16எம்பி கொண்ட அசத்தலான செல்பீ கேமரா பொறுத்தப்பட்டள்ளது. பின்பு உங்கள் விருப்பப்படி திரை தோற்றத்தை தனிப்பயனாக்க குறிப்பிட்ட விருப்பத்தை வழங்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், அதன்படி இதில் உள்ள செட்டிங்ஸ்>டிஸ்பிளே> நாட்ச். என்ற பகுதிக்கு சென்றால் நீங்கள் விரும்பும் அமைப்பை இதில் கொண்டுவரமுடியும்.

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.2ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் கிரிண் 710 செயலியைக் கொண்டு வெளிவரும். குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறந்த கேமிங் தொழில்நுட்பம்:

சிறந்த கேமிங் தொழில்நுட்பம்:

கேமிங் செயல்திறன் பொறுத்தவரை திரையை சார்ந்து இருக்கும், அதன்படி மென்மையான மற்றும் அதிவேக விளையாட்டுக்களை வழங்குவதற்கு ஜிபியு என்ற அம்சத்தை சார்ந்து தான் இருக்கும். அதன்படி கிளாஸ் கேமிங் அனுபவத்தை கொண்டுக்கும் வண்ணம் இந்த புதிய தொழிலநுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கிரிண் 710சிப்செட் மற்றும் ஜிபியு டர்போ இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மொபைல் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கிராபிக்ஸ் செயலாக்க தொழில்நுட்பத்துடன் இணைந்து, ஒட்டுமொத்த ஜி.பீ.யூ செயல்திறனில் 130% அதிகரிக்கும். அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பல்வேறு கேமிங் ஆப் பயன்பாடுகளை பயன்படுத்த முடியும்.

விற்பனை எப்போது:

விற்பனை எப்போது:

இந்த ஸ்மார்ட்போன் மாடலில் 3750எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் அமேசான் வலைதளத்தில் வரும் அக்டோபர் 24-ம் தேதி முதல் இந்த ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது, இருந்தபோதிலும் சிறப்பு சலுகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor 8X A performance beast in the mid-range segment : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X