அக்டோபர் 11: பட்ஜெட் விலையில் மிரட்டலான ஹானர் 8எக்ஸ் அறிமுகம்.!
ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனில் 20எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொபைல் சந்தையில் வரும் அக்டோபர் 11-ம் தேதி ஹானர் 8எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டள்ளது ஹானர் நிறுவனம். குறிப்பாக பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:
ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புக் கொண்டுள்ளது, அன்பின்பு
2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
இந்த ஸமார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனில் 20எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிண் 710எஸ்ஒசி:
ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.2ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் கிரிண் 710 செயலியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:
இக்கருவியில் 3650எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போனின்
ஆரம்ப விலை ரூ.12,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications