பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் அசத்தலான ஹானர் 8சி.!
ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொதுவாக 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்,அதன்படி பட்ஜெட் விலையில் டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு ஹானர் நிறுவனம் எப்போதும் பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டிவருகிறது. இந்நிலையில் ஹானர் 8சி ஸ்மார்ட்போனின் வருகை மிகப் பெரிய வரவேற்பை உருவாக்கியுள்ளது.

ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 632சிப்செட்
ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஹானர் 8சி ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஹானர் 8சி
ஹானர் 8சி ஸ்மார்ட்போன் பொதுவாக 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரிகொண்ட இந்த ஸமார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. அதேபோன்று 4ஜிபி ரேம் 64ஜிபி மெமரி கொண்ட இந்த ஸமார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.

டிசம்பர் 10
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் மற்றும் ஹானர் வலைதங்களில் டிசம்பர் 10-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன மாடலை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications