அக்டோபரில் வெளியாகும் 'ஹானர் 8' மடல் குறித்து நீங்கள் அறிய வேண்டிய 5 விஷயங்க்ள்

By Siva
|

ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்திய சந்தை என்பது மிகப்பெரியதாக இருப்பதால் இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளை வெளீயிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அக்டோபரில் வெளியாகும் ஹானர் 8: நீங்கள் அறிய வேண்டிய 5 விஷயங்கள்

அந்த வகையில் இம்மாதம் வெளிவரவுள்ள புதிய மாடல் 'ஹார்னர் 8'' (Honor 8). இதன் விலை சுமார் ரூ.27,000 இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

விண்டோஸ் லாப்டாப்களுக்கு 40% வரை தள்ளுபடி..

ஏற்கனவே இந்தியாவில் புகழ் பெற்றிருக்கும் Huawei நிறுவனத்தின் சப்-பிராண்ட் உற்பத்தியான இந்த ஹானர் 8 ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகள் குறித்து அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து நாங்கள் அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புகைப்பட ஆர்வலர்களூக்காக அமைந்த ஸ்பெஷன் ஸ்மார்ட்போன்

புகைப்பட ஆர்வலர்களூக்காக அமைந்த ஸ்பெஷன் ஸ்மார்ட்போன்

Huawei சமீபத்தில் வெளியிட்ட P9 என்ற ஸ்மார்ட்போனில் டூயல் கேமிரா செட்டப் இருந்தது போல, இந்த ஹானர் 8 மாடலிலும் அதே டெக்னாலஜி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (12+12) எம்பி அளவில் டூயல் கேமிரா இருக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலும் ஹானர் 8 மாடலில் சோனி சென்சார்கள் உள்ளது. ஒரு சென்சார் மோனோஷேட் ஷேட்களை பதிவு செய்யவும் இன்னொரு சென்சார் நிறத்தகவல்களை பதிவு செய்யவும் உதவும் என்பதால் இந்த டூயல் கேமிரா உங்களுக்கு வித்தியாசமான உணரை தரும். மேலும் இந்த மாடலில் 8 எம்பி செல்பி கேமிராவும் உள்ளது.

மெட்டல் மற்றும் கண்ணாடியினால் அமைந்த ஸ்மார்ட்போன்

மெட்டல் மற்றும் கண்ணாடியினால் அமைந்த ஸ்மார்ட்போன்

ஹார்னர் 8 மாடல் மெட்டல் மற்றும் கண்ணாடியினால் மட்டுமே முழுக்க முழுக்க பேனல் அமைந்துள்ளது. மேலும் 2.5D கர்வ்டு கிளாஸ் முன்பக்கமும், பின்பக்கமும் அமைந்துள்ள நிலையில் பக்கவாட்டில் மெட்டல் அமைக்கப்பட்டுள்ளது.

உறுதியான மெட்டல் மற்றும் கண்ணாடியினால் அமைந்துள்ளதால் உங்கள் கையில் இருந்து இந்த மாடல் ஸ்மார்ட்போன் ஸ்லிப் ஆக வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் கையாளுவதற்கு எளிதாகவும் உங்கள் கைக்கு அடக்கமாகவும் இருக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வேறு என்னென்ன வசதிகள் உள்ளன?

வேறு என்னென்ன வசதிகள் உள்ளன?

ஹானர் 8 மாடலின் ஆபரேட்டிங் சிஸ்டம் குறித்து பார்க்கும்போது ஆண்ட்ராய்டு மார்ஷ்மாலோ ஆபரேட்டிங் சிஸ்டமும், இந்நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான Emotion UI 4.2 வசதியும் உள்ளது.

இண்டர்னல் ஸ்டோரேஜ் எவ்வளவு?

இண்டர்னல் ஸ்டோரேஜ் எவ்வளவு?

நாம் ஏற்கனவே கூறியபடி இந்த மாடலின் மற்ற விபரங்கள் உறுதியாக தெரியவில்லை என்றாலும் இந்திய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் Kirin 950 சிப் செட் இந்த மாடலில் அமைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் 4 ஜிபி ரேம், 32 ஜீ இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இண்டர்னல் ஸ்டோரேஜை நீங்கள் 128 ஜிபி வரை மைக்ரோ SD கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்/.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி:

பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி:

ஹானர் 8 ஸ்மார்ட்போனில் அமைந்துள்ள ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் காரணமாக உங்கள் மொபைலுக்கு அதிக பாதுகாப்பு தருகிறது. நீங்கள் ஒரு அழைப்பை ஏற்றுக்கொள்ளவும், போன் செய்யவும் எஸ்.எம்.எஸ் செய்யவும், புகைப்படம் எடுக்கவும் இந்த பிங்கர் பிரிண்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் இந்த மாடலில் 3000mAH பவர் உள்ள பேட்டரி இணைக்கப்பட்டுள்ளதால் மிக வேகமாக சார்ஜ் ஏறுவதுடன் ஏறிய சார்ஜ் நீண்ட நேரம் இருந்து உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்

பாரத பிரதமரின் கனவு திட்டமான 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் அக்டோபரில் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் ஆக இந்த மாடல் இருக்க வாய்ப்பு இருப்பதாக ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்கு வரும் அனைத்து செல்போன் மாடல்களையும் இந்தியர்கள் ஏற்று கொண்டு வந்தாரை வாழ வைக்கும் இந்தியர்கள் இந்த மாடலையும் ஏற்று கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Huawei is all set to launch company's sub branded flagship smartphone Honor 8 in india. Here is what we expect from the upcoming smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X