அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஹானர் 8 ப்ரோ & ஹானர் 6எக்ஸ்.!
இந்த ஹானர் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 5.7 முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, (1440-2560) வீடியோ பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் இப்போது ஹானர் 8 ப்ரோ மற்றும் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்தள்ளது, இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹானர் 8 ப்ரோ மற்றும் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளன.
இந்த அதிரடி விலைகுறைப்பு ஆஃபர் வரும் டிசம்பர் 19-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்படடுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள்.

விலைகுறைப்பு:
ஹானர் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ,25,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டு 64ஜிபி முறையே ரூ.11,999 மற்றும் 32ஜிபி முறையே 9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 8 ப்ரோ:
இந்த ஹானர் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 5.7 முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, (1440-2560) வீடியோ பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியமான சிறப்பமசம் அது ரேம். 6ஜிபி ரேம் உடன் வெளிவந்துள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன். அதன்பின் 128ஜிபி மெமரி இதனுள் அடக்கம்.

கேமரா& பேட்டரி:
ஹானர் 8 ப்ரோ ரியர் கேமரா 12மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் எல்இடி ப்ளாஷ், மற்றும் 4 கே வீடியோ பதிவு போன்றவை இவற்றுள் அடக்கம். மேலும் 4000எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
இந்த ஹானர் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 1.8ஜிகாஹெர்ட்ஸ் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இயங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைஃபை, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.2, என்எப்சி, 4ஜி எல்டிஇ போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஹானர் 6எக்ஸ் :
ஹானர் 6எக்ஸ் கருவியானது நீங்கள் படம் பார்கா மற்றும் கேம்ஸ் விளையாட ஏதுவாக 403 பிபிஐ பிக்சல் அடர்த்தி (பிக்சல் பர் இன்ச்) கொண்ட, (1080 -1920) பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

முதன்மை கேமரா :
ஹானர் 6எக்ஸ் கருவியில் கேமரா ஒரு முக்கியமான சிறப்பம்சமாகும் இக்கருவி ஒரு 12எம்பி முதன்மை கேமரா மற்றும் ஒரு 2எம்பி இரண்டாம் நிலை கேமரா கொண்டுள்ளது அதாவது ஒரு இரட்டை பின்புற கேமரா கொண்டு வருகிறது. இக்கருவியின் எப் / 2.2 என ஒரு பரந்த துளை நீளம் மூலம் 1080 தர வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

2.5டி வளைந்த கண்ணாடி :
இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு சிறப்பம்சமாக முழு எச்டி உடனான 2.5டி வளைந்த கண்ணாடி அமைப்பு திகழ்கிறது. இது திரையில் ஒட்டுமொத்த மல்டிமீடியா பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தும். உடன் ஹானர் 6எக்ஸ் கருவியானது 2.1ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.7ஜிகாஹெர்ட்ஸ் உடனான நிறுவனத்தின் ஹூவாய் க்ரீன் 655 சிப் கொண்டு இயங்கும்.


Click it and Unblock the Notifications